தம்பி கேட்ட மூட்றா... மாருதியின் முதல் எலெக்ட்ரிக் கார் விலை இவ்ளோதானா... அடுத்த மாசம் களத்துல எறக்கறாங்க...

இந்தியாவில் டாடா (Tata), ஹூண்டாய் (Hyundai) மற்றும் எம்ஜி (MG) உள்பட பல்வேறு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) விற்பனை செய்து வருகின்றன. ஆனால் நம்பர்-1 கார் நிறுவனமாக திகழும் மாருதி சுஸுகி (Maruti Suzuki) இன்னும் ஒரு எலெக்ட்ரிக் காரை கூட விற்பனைக்கு கொண்டு வரவில்லை. ஆனால் மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara) வடிவில் அந்த குறை கூடிய விரைவில் நிவர்த்தி செய்யப்படவுள்ளது. இதுதான் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.

நடப்பு 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ (Bharat Mobility Expo) வாகன திருவிழாவில், மாருதி சுஸுகி இ விட்டாரா கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த காருக்கு அதிகாரப்பூர்வமற்ற முறையில் முன்பதிவுகள் (Bookings) ஏற்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Maruti Suzuki e Vitara Front Design

இதை தொடர்ந்து மாருதி சுஸுகி நிறுவனம் இ விட்டாரா எலெக்ட்ரிக் காரை அடுத்த மாதம் (மே), விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இது மாருதி சுஸுகி இ விட்டாரா காருக்காக காத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் (Hyundai Creta Electric) மற்றும் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக மாருதி சுஸுகி இ விட்டாரா விற்பனைக்கு வரவுள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும்.

Maruti Suzuki e Vitara

அவை டெல்டா (Delta), ஜெட்டா (Zeta) மற்றும் ஆல்பா (Alpha) ஆகியவை ஆகும். மறுபக்கம் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 48.8kWh மற்றும் 61.1kWh ஆகியவை ஆகும்.

வசதிகளை (Features) பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த வசதி வழங்கப்படும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி இ விட்டாரா பெற்றுள்ளது.

அத்துடன் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பனரோமிக் க்ளாஸ் ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், 360 டிகிரி கேமரா மற்றும் 7 ஏர்பேக்குகள் ஆகியவையும் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 15-17 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான், அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும்.

மாருதி சுஸுகி நிறுவனம் மிக நீண்ட தாமதத்திற்கு பிறகு, இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் காலடி எடுத்து வைக்கிறது. இதன் காரணமாக இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே விலையை சரியாக நிர்ணயம் செய்தால், மாருதி சுஸுகி இ விட்டாரா விற்பனையில் சாதிக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 5, 2025, 20:57 [IST]
English summary
Maruti suzuki e vitara likely to launch in may expected price features battery options
மேலும்... #maruti suzuki #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+