பொறுத்தது போதும்னு பொங்கி எழுந்தது மாருதி! இனி எமனே வந்தாலும் இந்த கார் என்ன சேதினு கேக்கும்! விலை இவ்ளோதானா!

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் எது என கேட்டால், பச்சை குழந்தை கூட மாருதி சுஸுகி (Maruti Suzuki) என கூறி விடும். ஆனால் டாடா (Tata) மற்றும் மஹிந்திரா (Mahindra) போன்ற நிறுவனங்களின் கார்கள் எல்லாம், குளோபல் என்சிஏபி (Global NCAP) மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) போன்ற அமைப்புகளின் மோதல் சோதனைகளில் (Crash Tests), நல்ல பாதுகாப்பு ரேட்டிங்கை (Safety Rating) பெற தொடங்கிய பிறகு, மாருதி சுஸுகி நிறுவனம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.

இதன் காரணமாக மாருதி சுஸுகி நிறுவனமும் தற்போது தனது கார்களில் பாதுகாப்பு வசதிகளை (Safety Features) அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பல்வேறு கார்களில் தற்போது ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Maruti Eeco

இங்கே ஸ்டாண்டர்டு என்றால், விலை குறைவான ஆரம்ப நிலை வேரியண்ட் முதல் சற்று விலை உயர்ந்த டாப் வேரியண்ட் வரை, அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகளை வழங்குவது ஆகும். தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பல்வேறு கார்களில் 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன.

இந்த வரிசையில் மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco) காரும் தற்போது இந்த அப்டேட்டை பெற்றுள்ளது. ஆம், மாருதி சுஸுகி ஈக்கோ காரிலும் தற்போது ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பாக மாருதி சுஸுகி ஈக்கோ காரில் ஸ்டாண்டர்டாக 2 ஏர்பேக்குகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன.

Maruti Suzuki Eeco MPV

தற்போது அது 6-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே இது மாருதி சுஸுகி ஈக்கோ காரின் பாதுகாப்பு வசதிகளில் செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய அப்டேட்-ஆக கருதப்படுகிறது. அத்துடன் மாருதி சுஸுகி நிறுவனம் ஈக்கோ காரின் சீட்டிங் ஆப்ஷன்களிலும் (Seating Options) மாற்றங்களை செய்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

மாருதி சுஸுகி ஈக்கோ கார் முன்பு 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைத்து கொண்டிருந்தது. இதில், 7 சீட்டர் ஆப்ஷனின் விற்பனை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே இனிமேல் மாருதி சுஸுகி ஈக்கோ கார் 7 சீட்டர் ஆப்ஷனில் கிடைக்காது. அதற்கு பதிலாக புதிய 6 சீட்டர் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனவே மாருதி சுஸுகி ஈக்கோ கார் இனி 5 சீட்டர் மற்றும் 6 சீட்டர் ஆப்ஷன்களில் மட்டுமே கிடைக்கும். இதில், 6 சீட்டர் வெர்ஷனின் மத்திய வரிசையில் கேப்டன் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஆனால் மாருதி சுஸுகி நிறுவனம் ஈக்கோ காரின் புதிய விலைகள் (Prices) எவ்வளவு? என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.

ஆனால் இந்த அப்டேட்கள் செய்யப்படுவதற்கு முன்னதாக மாருதி சுஸுகி ஈக்கோ காரின் ஆரம்ப விலை 5.44 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 6.70 லட்ச ரூபாய் ஆகவும் இருந்தது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போது பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளதால், மாருதி சுஸுகி ஈக்கோ காரின் விலை சற்று உயரலாம்.

அதாவது வேரியண்ட்களை பொறுத்து 20 ஆயிரம்-30 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த விலை உயர்விற்கு பின்னரும் கூட, மாருதி சுஸுகி ஈக்கோ இந்திய சந்தையில் கிடைக்க கூடிய விலை குறைவான எம்பிவி ரக கார்களில் (MPV Cars) ஒன்று என்ற பெருமை தக்க வைத்து கொள்ளும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனம் ஈக்கோ காரின் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தியிருப்பது உண்மையிலேயே மிகவும் பாராட்டுக்குரிய ஒரு விஷயம். இது மாருதி சுஸுகி ஈக்கோ காரின் விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்க உதவி செய்யலாம் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Thursday, April 10, 2025, 12:31 [IST]
English summary
Maruti suzuki eeco gets 6 airbags as standard check all details here
மேலும்... #maruti suzuki #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+