27 கிமீ மைலேஜ்! வெறும் 5 லட்சத்துக்கு 6 பேர் போற காரா! சொந்தமா புது கார் வாங்க இதை விட நல்ல சான்ஸ் கிடைக்காது!
இந்திய சாலைகளை ஒரு காலத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஆம்னி (Maruti Suzuki Omni). ஆனால் மிக கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் மாசு உமிழ்வு விதிமுறைகளால், கடந்த 2019ம் ஆண்டில், மாருதி சுஸுகி ஆம்னி காரின் விற்பனை நிறுத்தப்பட்டது.
ஆனால் மாருதி சுஸுகி ஆம்னியால் ஏற்பட்ட வெற்றிடத்தை, மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco) வெகு விரைவாகவே நிரப்பி விட்டது. இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் மாருதி சுஸுகி ஈக்கோ மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கை பதிவு செய்து வருகிறது. இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும் கூட, மாருதி சுஸுகி ஈக்கோ பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 10,785 ஈக்கோ வேன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த எண்ணிக்கை 10,985 ஆக இருந்தது.
அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 200 மாருதி சுஸுகி ஈக்கோ வேன்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. எனினும் இது சிறிய அளவிலான வீழ்ச்சிதான் என்பதால், கூடிய விரைவிலேயே மாருதி சுஸுகி ஈக்கோ மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நடப்பு 2025-26ம் நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் (ஏப்ரல்-ஆகஸ்ட்) ஒட்டுமொத்தமாக 56,231 மாருதி சுஸுகி ஈக்கோ வேன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024-25ம் நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் 56,692 மாருதி சுஸுகி ஈக்கோ வேன்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இந்த வகையில் பார்த்தால், 461 மாருதி சுஸுகி ஈக்கோ வேன்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதுவும் கூட சிறிய அளவிலான வீழ்ச்சிதான். கூடிய விரைவில் தீபாவளி பண்டிகை காலம் வரவுள்ளது. அத்துடன் இந்தியாவில் கார்கள் மீதான ஜிஎஸ்டி (GST) வரியும் குறையவுள்ளது. எனவே வரும் மாதங்களில் மாருதி சுஸுகி ஈக்கோ வேனின் விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஈக்கோ காரின் ஆரம்ப விலை வெறும் 5,69,500 ரூபாயாக மட்டுமே உள்ளது. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இதுவே ஓரளவிற்கு குறைவான விலையாகதான் கருதப்படுகிறது.
ஆனால் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், கூடிய விரைவில் கார்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படவுள்ளது. அப்போது மாருதி சுஸுகி ஈக்கோ காரின் விலை இன்னும் வெகுவாக குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கார்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைய போகிறது. அப்படியானால் 10 சதவீதம் விலை குறையும்.
இந்த வகையில் பார்த்தால், மாருதி சுஸுகி ஈக்கோ வேனின் விலை 57 ஆயிரம் ரூபாய் வரை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது நடக்கும்பட்சத்தில், மாருதி சுஸுகி ஈக்கோ காரின் ஆரம்ப விலை வெறும் 5.13 லட்ச ரூபாயாக குறையலாம். எனவே ஜிஎஸ்டி சீர்திருத்தம் என்பது, சொந்தமாக புதிய கார் வாங்க நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது. ஆனால் இந்த தகவல் உறுதி செய்யப்பட இன்னும் சில வாரங்கள் காத்திருக்க வேண்டும்.
ஆம், அனேகமாக அடுத்த மாதம் (அக்டோபர்) ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி ஈக்கோ கார் மிகவும் விலை குறைவானதாக இருந்தாலும் கூட, 5 சீட்டர் மற்றும் 6 சீட்டர் என 2 ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் இந்த காரின் அனைத்து வேரியண்ட்களிலும் பாதுகாப்பிற்கு ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.
இப்படி குறைவான விலை, அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் மற்றும் அதிக ஏர்பேக்குகள் போன்ற சிறப்பம்சங்கள் உடன், சிறப்பான மைலேஜ் (Mileage) தரக்கூடிய கார்களில் ஒன்றாகவும் மாருதி சுஸுகி ஈக்கோ திகழ்கிறது. ஈக்கோ காரின் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 26.78 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் குறைவான விலையில், அதிக மைலேஜ் தரக்கூடிய, அதே நேரத்தில் நிறைய பேர் சௌகரியமாக பயணம் செய்ய கூடிய வகையிலான ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி ஈக்கோ நல்ல ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








