மீண்டும் விற்பனைக்கு வரப்போகுதா மாருதி ஆம்னி! இந்த விஷயம் லீக் ஆனதாலதான் ஈக்கோ சேல்ஸ் படுத்துருச்சா?

இந்திய கார் சந்தையில் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்த கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஆம்னி (Maruti Suzuki Omni). கடந்த 1984ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுஸுகி ஆம்னி, கடந்த 2019ம் ஆண்டு வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதாவது கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் மாருதி சுஸுகி ஆம்னி விற்பனையில் இருந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மிக நீண்ட காலம் விற்பனை செய்யப்பட்ட கார்களில் ஒன்று என்ற பெருமையை மாருதி சுஸுகி ஆம்னி பெறுகிறது.

இந்திய கார் சந்தையில் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் (Hindustan Ambassador) எவ்வளவு பிரபலமாக இருந்ததோ, கிட்டத்தட்ட அதே அளவிற்கு மாருதி சுஸுகி ஆம்னியும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது. திரைப்படங்களில் கடத்தல் காட்சிகள் என்றால், இயக்குனர்களின் முதல் சாய்ஸ் மாருதி சுஸுகி ஆம்னிதான்!

Maruti Suzuki Omni

அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்கள், டாக்ஸி மற்றும் ஆம்புலன்ஸ் தொழில் செய்பவர்கள் ஆகியோரின் முதல் சாய்ஸ் ஆகவும் மாருதி சுஸுகி ஆம்னியே இருந்து வந்தது. விற்பனை நிறுத்தப்பட்ட பிறகு, தற்போதெல்லாம் இந்திய சாலைகளில் மாருதி சுஸுகி ஆம்னியை பார்ப்பது என்பது அரிதான ஒரு விஷயமாக மாறி விட்டது.

இதற்கு மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco) காரின் எழுச்சியும் ஒரு காரணம். மாருதி சுஸுகி ஆம்னி காருக்கு சிறப்பான மாற்றாக மாருதி சுஸுகி ஈக்கோ திகழ்ந்து வருகிறது. ஆனால் இந்திய சந்தையில் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் மாருதி சுஸுகி ஈக்கோ கார் நேரம் சரியாக அமையவில்லை.

Maruti Suzuki Eeco

ஆம், மாருதி சுஸுகி ஈக்கோ விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய சந்தையில் 11,678 ஈக்கோ கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 11,250 ஆக குறைந்துள்ளது.

இது 3.67 சதவீத வீழ்ச்சி ஆகும். மாதாந்திர ரீதியில்தான் வீழ்ச்சி என்றால், வருடாந்திர ரீதியிலும் கூட மாருதி சுஸுகி ஈக்கோ வீழ்ச்சியைதான் பதிவு செய்துள்ளது. ஆம், கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 12,019 ஈக்கோ கார்களை விற்பனை செய்திருந்தது.

ஆனால் இந்த எண்ணிக்கையானது, நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி 11,250 ஆக குறைந்துள்ளது. இது 6 சதவீத வீழ்ச்சி ஆகும். இது தற்காலிகமான ஒரு வீழ்ச்சியாகவே இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். வரும் மாதங்களில், அனேகமாக நடப்பு பிப்ரவரி மாதத்திலேயே கூட, மாருதி சுஸுகி ஈக்கோ மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி ஆம்னி கார் இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாகவே மாருதி சுஸுகி ஈக்கோ விற்பனையில் சரிவை சந்தித்திருக்கும் என்ற ரீதியில் சமூக வலை தளங்களில் ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இரண்டிற்கும் தொடர்பு இருப்பதாக நாங்கள் கருதவில்லை. முதலில் மாருதி சுஸுகி ஆம்னி கார் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் தற்போதைக்கு தென்படவில்லை. அதாவது மாருதி சுஸுகி ஆம்னி கார் மீண்டும் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லை.

எனவேதான் மாருதி சுஸுகி ஈக்கோ காரின் விற்பனை சரிவிற்கும், மாருதி சுஸுகி ஆம்னி மீண்டும் விற்பனைக்கு வருவதாக வெளியாகி வரும் தகவல்களுக்கும் தொடர்பு இல்லை என நாங்கள் கருதுகிறோம். சந்தையில் தேவை குறைவு காரணமாக மாருதி சுஸுகி ஈக்கோ காரின் விற்பனையில் சிறிய அளவிலான சரிவு ஏற்பட்டிருக்கலாம்.

அதேபோல் சரக்கு தேங்குவதை தவிர்ப்பதற்காக டீலர்ஷிப்களுக்கு அனுப்பும் ஈக்கோ கார்களின் எண்ணிக்கையை ஒருவேளை மாருதி சுஸுகி நிறுவனம் குறைத்திருக்கலாம். இது போன்ற காரணங்களால்தான், மாருதி சுஸுகி ஈக்கோ காரின் விற்பனை சரிவை சந்தித்திருக்க கூடும். எனவே அடுத்த மாதமே ஈக்கோ விற்பனையில் வளர்ச்சி எனும் செய்தியை நாம் கேட்டாலும் கேட்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 18, 2025, 17:44 [IST]
English summary
Maruti suzuki eeco sales report january 2025 check all details here
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+