வெறும் 5 லட்ச ரூபா ரேஞ்சுல 6 பேர் போற காரா! 27 கிமீ மைலேஜை வேற வாரி வழங்குது!

இந்திய சந்தையில் குறைவான விலையில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய ஒரு காரை வாங்க வேண்டும் என்றால், பலருக்கும் முதலில் நினைவிற்கு வருவது மாருதி சுஸுகி ஈக்கோவாகதான் (Maruti Suzuki Eeco) இருக்கும். இதன் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் 12,341 ஈக்கோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 11,916 ஆக மட்டுமே இருந்தது.

Maruti Suzuki Eeco Airbags

அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 425 மாருதி சுஸுகி ஈக்கோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. மாருதி சுஸுகி ஈக்கோ காரின் விற்பனை சிறப்பாக இருப்பதற்கு அதன் குறைவான விலை மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஈக்கோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.70 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. அதே நேரத்தில் மாருதி சுஸுகி ஈக்கோ காரின் டாப் வேரியண்ட்டின் விலை 6.96 லட்ச ரூபாயாக உள்ளது. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

Maruti Suzuki Eeco

மாருதி சுஸுகி ஈக்கோ கார் 5 சீட்டர் மற்றும் 6 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர ஆம்புலன்ஸ் ஷெல் மற்றும் ஆம்புலன்ஸ் என கூடுதலாக 2 மாடல்களிலும் மாருதி சுஸுகி ஈக்கோ விற்பனை செய்யப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இதில், மாருதி சுஸுகி ஈக்கோ ஆம்புலன்ஸ் ஷெல் மாடலின் விலை 6.97 லட்ச ரூபாய் ஆகவும், மாருதி சுஸுகி ஈக்கோ ஆம்புலன்ஸ் மாடலின் விலை 8.70 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான். மாருதி சுஸுகி ஈக்கோ காரின் விற்பனை சிறப்பாக இருப்பதற்கு மற்றொரு காரணம் அதன் மைலேஜ் ஆகும்.

மாருதி சுஸுகி ஈக்கோ காரின் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 19.71 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. அதே நேரத்தில் இதன் சிஎன்ஜி/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 26.78 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகின்றன. இவை அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும்.

மாருதி சுஸுகி ஈக்கோ விலை குறைவானதாக இருந்தாலும் கூட, 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் + இபிடி, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் என ஏராளமான பாதுகாப்பு வசதிகள் (Safety Features) வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்துதான், மாருதி சுஸுகி ஈக்கோவை மிகவும் வெற்றிகரமான தயாரிப்பாக மாற்றியுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான ஒரு காரை எதிர்பார்க்க கூடிய இந்திய வாடிக்கையாளர்களுக்கு, மாருதி சுஸுகி ஈக்கோ நல்ல ஆப்ஷனாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, August 1, 2025, 23:09 [IST]
English summary
Maruti suzuki eeco sales report july 2025 12341 units sold
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+