மறுபிறவி எடுத்த மாருதி ஆம்னி! 27 கிமீ மைலேஜ், 6 பேர் போகலாம்! ஆனா விலை வெறும் 5 லட்சம்தானா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco). மாருதி சுஸுகி ஆம்னி (Maruti Suzuki Omni) காருக்கு மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக மாருதி சுஸுகி ஈக்கோ திகழ்ந்து வருகிறது.

விலை குறைவு, மைலேஜ் அதிகம் மற்றும் அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் ஆகிய 3 காரணங்களால்தான், மாருதி சுஸுகி ஈக்கோ காரை வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வாங்கி கொண்டுள்ளனர். இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை மாருதி சுஸுகி ஈக்கோ பதிவு செய்து வருகிறது.

Maruti Suzuki Eeco Airbags

இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதமும் விதிவிலக்கு அல்ல. மாருதி சுஸுகி ஈக்கோ காரின் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் இந்த சேல்ஸ் ரிப்போர்ட் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், 13,200 மாருதி சுஸுகி ஈக்கோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் வெறும் 10,589 மாருதி சுஸுகி ஈக்கோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 2,611 மாருதி சுஸுகி ஈக்கோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Maruti Suzuki Eeco

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், குறைவான விலை, அதிக மைலேஜ் மற்றும் அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் ஆகிய 3 காரணங்களால்தான், மாருதி சுஸுகி ஈக்கோ காரின் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது. தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஈக்கோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 5.21 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 6.36 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இதுதவிர ஆம்புலன்ஸ் ஷெல் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகிய 2 வேரியண்ட்களிலும் மாருதி சுஸுகி ஈக்கோ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலை முறையே 6.37 மற்றும் 8.02 லட்ச ரூபாயாக இருக்கின்றன. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

மறுபக்கம் மாருதி சுஸுகி ஈக்கோ கார் 1.2 லிட்டர் பெட்ரோல்/5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 1.2 லிட்டர் சிஎன்ஜி/5 ஸ்பீடு மேனுவல் என 2 ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றின் மைலேஜ் முறையே ஒரு லிட்டருக்கு 19.71 கிலோ மீட்டர் ஆகவும் மற்றும் ஒரு கிலோவிற்கு 26.78 கிலோ மீட்டர் ஆகவும் உள்ளது. இது மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படும் அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும்.

அதே நேரத்தில் மாருதி சுஸுகி ஈக்கோ காரானது, 5 சீட்டர் மற்றும் 6 சீட்டர் என 2 ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முன்பு மாருதி சுஸுகி ஈக்கோ காரில் 7 சீட்டர் வேரியண்ட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக 7 சீட்டர் வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி ஆம்னியின் மறுபிறவி என மாருதி சுஸுகி ஈக்கோவை குறிப்பிடலாம். குறைவான விலையில், அதிக மைலேஜ் வழங்க கூடிய அதே நேரத்தில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி ஈக்கோ ஏற்றது என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 2, 2025, 14:32 [IST]
English summary
Maruti suzuki eeco sales report november 2025 13200 units sold
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+