பைக் மாதிரி மைலேஜ்! வெறும் 5 லட்சத்துக்கு 6 பேர் போற காரா! மாருதி ஆம்னியே புதுசா பொறந்து வந்த மாதிரி இருக்கு!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco). மாருதி சுஸுகி ஆம்னியின் (Maruti Suzuki Omni) விற்பனை நிரப்பப்பட்ட காரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை, மாருதி சுஸுகி ஈக்கோ மிகவும் வெற்றிகரமாக நிரப்பி வருகிறது.

அதாவது மாருதி சுஸுகி ஈக்கோ காரின் விற்பனை ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதமும் விதிவிலக்கு அல்ல. மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம், 13,537 மாருதி சுஸுகி ஈக்கோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Maruti Suzuki Eeco

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெறும் 11,653 மாருதி சுஸுகி ஈக்கோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 1,884 மாருதி சுஸுகி ஈக்கோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மாருதி சுஸுகி ஈக்கோ காருக்கு வாடிக்கையாளர்கள் எவ்வளவு பெரிய வரவேற்பை வழங்கி வருகின்றனர்? என்பதற்கு இந்த வளர்ச்சி ஒரு உதாரணம் மட்டுமே. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஈக்கோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.21 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

Maruti Suzuki Eeco Airbags

அதே நேரத்தில் மாருதி சுஸுகி ஈக்கோ காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 6.36 லட்ச ரூபாயாக மட்டுமே இருந்து வருகிறது. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றான மாருதி சுஸுகி ஈக்கோ 5 சீட்டர் ஆப்ஷன் மட்டுமல்லாது, 6 சீட்டர் ஆப்ஷனிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே ஓரளவிற்கு குறைவான விலையில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான, அதே நேரத்தில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, மாருதி சுஸுகி ஈக்கோ மிகச்சிறந்த ஆப்ஷன் ஆகும்.

மாருதி சுஸுகி ஈக்கோ காரின் பெட்ரோல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 19.71 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக மாருதி சுஸுகி நிறுவனம் கூறுகிறது. மறுபக்கம் இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 26.78 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இவை மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி ஈக்கோ மிகவும் விலை குறைவான காராக இருந்தாலும் கூட, அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. மேலும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் (Safety Features), மாருதி சுஸுகி ஈக்கோ கொண்டுள்ளது.

எனவே 5.21-6.36 லட்ச ரூபாய் என்ற விலைக்கு, மாருதி சுஸுகி ஈக்கோ மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பு என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஈக்கோ காருக்கு நேரடி போட்டி என எந்தவொரு காரும் இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Sunday, November 2, 2025, 17:54 [IST]
English summary
Maruti suzuki eeco sales report october 2025 13537 units sold
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+