7 சீட்டர், 26 கிமீ மைலேஜ், வெறும் ரூ8.97 லட்சம் தான் விலை! இந்த கார் தான் இந்தியாவில் நம்பர் 1 சேல்ஸ்!
மாருதி எர்டிகா நிறுவனம் மீண்டும் இந்தியாவில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 7 சீட்டர் காராக இந்த கார் தான் நம்பர் இடத்தை பிடித்துள்ளது. கடந்த மே மாத விற்பனை விபரங்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள நிலையில் இந்த விபரம் வெளிவந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் தான் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 7 சீட்டர் காராக நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. ஒவ்வொரு மாதம் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விற்பனை விபரங்களை வெளியிடும் போது இந்த வாகனம் தான் எப்பொழுதும் நம்பர் 1 இடத்தில் இருக்கும். இந்த நிலைமை தான் கடந்த மே மாத விற்பனை விபரங்களிலும் தென்பட்டுள்ளது.

மாருதி எர்டிகா நிறுவனம் கடந்த மே மாதம் மட்டும் மொத் 16140 கார்களை விற்பனை செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் கடந்தாண்டு இதே காலகட்டத்தில் நடந்த விற்பனையில் 13893 என்ற விற்பனையில் இருந்து 16 சதவீதம் அதிகம் ஆகும். எர்டிகா கார் தான் தனது செக்மெண்டில் நம்பர் ஒன் இடத்தில் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த கார் விற்பனையிலும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
மஹிந்திரா நிறுவனம் தனது ஸ்கார்பியோ காரை எப்படியாவது நம்பர் ஒன் இடத்திற்கு வரவேண்டும் என திண்டாடி வருகிறது. தற்போது தான் 14401 வாகனங்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த காரின் விற்பனையை அதிகரிக்க அந்நிறுவனம் போராடி வருகிறது.

மாருதி எர்டிகா காரின் இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 103 பிஎஸ் பவரும், 137 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் சிஎன்ஜி ஆப்ஷன் உடன் கூட வருகிறது.
இந்த காரின் பெட்ரோல் வேரியன்டை பொருத்தவரை 20.51 கி.மீ மைலேஜை வழங்குகிறது. சிஎன்ஜி வேரியன்ட் மைலேஜை பொருத்தவரை 26.11 கி.மீ மைலேஜை வழங்கி வருகுிறது. பெடல் ஸ்விஃப்டர்கள், ஆட்டோ ஹெட்லைட்கள், ஆட்டோமெட்டிக் ஏசி, க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.

எர்டிகா கார் 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. சுஸூகி ஸ்மார்ட் பிளே ப்ரோ டெக்னாலஜி, வாய் கமெண்ட்ஸ், கனெக்டெட் கார் டெக்னாலஜி, வாகன வெஹிகிள் டிராக்கிங் தொழிற்நுட்பம், ஜியோ ஃபென்சிங், ஓவர் ஸ்பீடு அலர்ட், 360 டிகிரி சரவுண்ட் வியூ கேமரா உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குடும்பத்துடன் 7 பேர் பயணிக்கும் ரக கார்களின் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் தற்போது மைலேஜ் மற்றும் குறைந்த விலை கொண்ட காராக இந்த கார் விற்பனையாகி வருகிறது. இந்த கார் நிச்சயம் மக்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









