27 கிமீ மைலேஜ் தர்ற 7 சீட்டர் கார தர மட்ட ரேட்ல வித்து தள்ளீட்டு இருக்காங்க! மொத்த குடும்பமும் ஒன்னா போலாம்!
2024-25ம் நிதியாண்டு கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து, 2025-26ம் நிதியாண்டில் நாம் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த சமயத்தில், கடந்த 2024-24ம் நிதியாண்டில் மிகவும் அதிகமாக விற்பனையான கார்களின் சேல்ஸ் ரிப்போர்ட்கள் (Sales Reports) வெளியாகி கொண்டுள்ளன. இந்த வரிசையில் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரின், கடந்த 2024-25ம் நிதியாண்டிற்கான சேல்ஸ் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2024-25ம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 1,90,974 எர்டிகா கார்களை விற்பனை செய்துள்ளது.
இதன் மூலம் கடந்த 2024-25ம் நிதியாண்டில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி எர்டிகா 4வது இடத்தை பிடித்துள்ளது. முதல் 3 இடங்களில் முறையே மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R), டாடா பன்ச் (Tata Punch) மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) ஆகிய கார்கள் உள்ளன.

இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளது. கடந்த 2024-25ம் நிதியாண்டில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு எம்பிவி ரக கார் என்றால், அது மாருதி சுஸுகி எர்டிகா மட்டுமே. மற்றபடி இந்த பட்டியலில் எஸ்யூவி மற்றும் ஹேட்ச்பேக் ரக கார்கள்தான் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.
அதாவது இந்த பட்டியலில், 5 எஸ்யூவி ரக கார்களும் (டாடா பன்ச், ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ), 3 ஹேட்ச்பேக் ரக கார்களும் (மாருதி சுஸுகி வேகன் ஆர், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் மாருதி சுஸுகி பலேனோ) இடம்பெற்றுள்ளன.

இதுதவிர இந்த பட்டியலில் ஒரு செடான் ரக காரும் இடம்பெற்றுள்ளது. அது மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) ஆகும். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு எம்பிவி ரக காரான மாருதி சுஸுகி எர்டிகாவை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குவதற்கு 3 முக்கியமான காரணங்கள் உள்ளன.
அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் என்பதுதான் முதல் காரணம் ஆகும். மாருதி சுஸுகி எர்டிகா காரில் 7 பேர் சௌகரியமாக அமர்ந்து பயணம் செய்ய முடியும். எனவே டிராவல்ஸ் நிறுவனங்களை நடத்துபவர்கள் மத்தியிலும், அதிகம் பேர் இருக்க கூடிய அளவில் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் மத்தியிலும் மாருதி சுஸுகி எர்டிகா பிரபலமாக திகழ்கிறது.
இரண்டாவது காரணம் மைலேஜ் (Mileage). மாருதி சுஸுகி எர்டிகா காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கின்றன. மூன்றாவது காரணம் விலை. மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 8.84 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.
அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 13.13 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்த விலைக்கு மாருதி சுஸுகி எர்டிகா காரை வாடிக்கையாளர்கள் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதுவதால்தான், அதன் விற்பனை எண்ணிக்கை சிறப்பாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் கியா கேரன்ஸ் (Kia Carens) போன்ற கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி எர்டிகா மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்தாக உள்ளது. அத்துடன் ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) மற்றும் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6) ஆகிய கார்களுடனும், மாருதி சுஸுகி எர்டிகா போட்டியிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








