26 கிமீ மைலேஜ் தரும் 7 சீட்டர் காரின் விலை இவ்ளோ குறைய போகுதா! போட்டி நிறுவனங்களை கதிகலங்க வைத்த மாருதி!
இந்திய சந்தையில் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியல் (Top 10 Cars August 2025) வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18,445 மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18,580 மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 135 மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 0.73 சதவீத வீழ்ச்சி ஆகும்.

சிறிய அளவில் வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் கூட, நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி எர்டிகா முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. மாருதி சுஸுகி எர்டிகா காரை வாடிக்கையாளர்கள் வெகுவாக விரும்புவதற்கு 3 முக்கியமான காரணங்கள் உள்ளன.
இதில், முதலாவது காரணம் விலை ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 9,11,500 ரூபாயாக மட்டும்தான் உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13,40,500 ரூபாயாக இருக்கிறது. இவை மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

ஆனால் ஜிஎஸ்டி (GST) வரி குறைப்பால், வரும் செப்டம்பர் 22ம் தேதியில் இருந்து, மாருதி சுஸுகி எர்டிகா காரின் விலை குறையவுள்ளது. அனேகமாக மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் புதிய விலை 8.80 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அதே நேரத்தில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் டாப் வேரியண்ட்டின் புதிய விலை 12.95 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். மாருதி சுஸுகி நிறுவனம் எர்டிகா காரின் புதிய விலைகள் குறித்த அறிவிப்பை கூடிய விரைவில் வெளியிடவுள்ளது. அதுவரை நாம் காத்திருப்பது சிறந்தது.
மாருதி சுஸுகி எர்டிகா காரை வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்புவதற்கு 2வது காரணம் அதன் மைலேஜ் (Mileage) ஆகும். எர்டிகா காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக, மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மாருதி சுஸுகி எர்டிகா காரை வாடிக்கையாளர்கள் விரும்புவதற்கு 3வது காரணம், அதில் 7 பேர் சௌகரியமாக பயணம் செய்ய முடியும் என்பதுதான். மாருதி சுஸுகி எர்டிகா கார், எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்தது. எனவே 3 வரிசை இருக்கை அமைப்பை அது கொண்டுள்ளது. இதன் காரணமாக மாருதி சுஸுகி எர்டிகா காரில் 7 பேர் சௌகரியமான பயணம் செய்யலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில், அதிக மைலேஜ் வழங்க கூடிய மற்றும் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான ஒரு காரை எதிர்பார்க்க கூடிய இந்திய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி எர்டிகா மிகச்சிறந்த ஆப்ஷன். இந்திய சந்தையில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) மற்றும் ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) போன்ற கார்களுடன், மாருதி சுஸுகி எர்டிகா போட்டியிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








