7 பேர் போற 27 கிமீ மைலேஜ் காரை அடி மாட்டு ரேட்ல விக்கறாங்களா! அதான் ஒரே மாசத்துல இத்தன பேர் வாங்கீட்டாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான எம்பிவி (MPV) கார் என்றால், அனைவரின் மனதிற்கும் முதலில் நினைவிற்கு வருவது நிச்சயம் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காராகதான் இருக்கும். 7 சீட்டர் காரான மாருதி சுஸுகி எர்டிகா, அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்து கொண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தாங்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக மாருதி சுஸுகி எர்டிகா காரை கருதுகின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை மாருதி சுஸுகி எர்டிகா பதிவு செய்கிறது.
நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் அது தொடர்ந்துள்ளது. விற்பனை எண்ணிக்கை பிரம்மாண்டமானது என்றாலும் கூட, சிறிய அளவிலான சரிவையும் சேர்த்தே பதிவு செய்துள்ளது மாருதி சுஸுகி எர்டிகா. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 14,868 எர்டிகா கார்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் இந்த எண்ணிக்கை, கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15,519 ஆக இருந்தது. இது 4 சதவீத வீழ்ச்சி ஆகும். மாருதி சுஸுகி எர்டிகா காரின் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலம் இந்த தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது.
மாருதி சுஸுகி எர்டிகா கார் வெறும் 4 சதவீத சரிவை மட்டுமே பதிவு செய்துள்ளது. இது சிறிய அளவிலான சரிவு மட்டுமே என்பதால், நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதமே, மாருதி சுஸுகி எர்டிகா மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதை நிலையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டான ஸ்மார்ட் ஹைப்ரிட் LXI (O) வேரியண்ட்டின் விலை 8.84 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டான ஸ்மார்ட் ஹைப்ரிட் ZXI+ AT வேரியண்ட்டின் விலை 13.13 லட்ச ரூபாயாக இருக்கிறது.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். அத்துடன் இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் இருப்பதிலேயே அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இந்த காரின் பெட்ரோல் வேரியண்ட்களின் மைலேஜூம் கூட சிறப்பான ஒன்றுதான்.
ஆனால் சிஎன்ஜி வேரியண்ட்கள் உடன் ஒப்பிடும்போது, பெட்ரோல் வேரியண்ட்களின் மைலேஜ் சற்று குறைவு. அதாவது மாருதி சுஸுகி எர்டிகா காரின் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.51 கிலோ மீட்டர் மைலேஜையும், பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.30 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்குகின்றன.
அதிகம் பேர் பயணம் செய்ய முடியும், நல்ல மைலேஜ், சரியான விலை நிர்ணயம் போன்ற காரணங்களால்தான், மாருதி சுஸுகி எர்டிகா விற்பனையில் அமர்க்களப்படுத்துகிறது. இந்திய சந்தையில் கியா கேரன்ஸ் (Kia Carens) போன்ற கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி எர்டிகா மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.


Click it and Unblock the Notifications








