7 பேர் போற காரை தர மட்ட ரேட்டுக்கு வித்துட்டு இருக்காங்க... பைக் மாதிரி மைலேஜை வேற வாரி வழங்குது...
இந்திய சந்தையில் ஒரு எம்பிவி ரக காரை வாங்க வேண்டுமென்றால், அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது மாருதி சுஸுகி எர்டிகா காராகதான் (Maruti Suzuki Ertiga) இருக்கும். இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் மாருதி சுஸுகி எர்டிகா மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதமும் அது தொடர்ந்துள்ளது. மாருதி சுஸுகி எர்டிகா காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 14,248 எர்டிகா கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 14,632 ஆக இருந்தது. இது 3 சதவீத வீழ்ச்சி ஆகும்.

3 சதவீத வீழ்ச்சி என்றாலும் கூட, மாருதி சுஸுகி எர்டிகா காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாத்திற்கான விற்பனை எண்ணிக்கை சிறப்பான ஒன்றாகவே கருதப்படுகிறது. அத்துடன் 3 சதவீதம் என்பது மிகவும் சிறிய ஒரு சரிவுதான். எனவே நடப்பு பிப்ரவரி மாதத்திலேயே கூட மாருதி சுஸுகி எர்டிகா இந்த சரிவில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை தற்போதைய நிலையில் 8.84 லட்ச ரூபாயாக இருந்து வருகிறது. மறுபக்கம் டாப் வேரியண்ட் விலை 13.13 லட்ச ரூபாயாக உள்ளது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக வாடிக்கையாளர்கள் கருதுவதால்தான், மாருதி சுஸுகி எர்டிகா காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து கொண்டுள்ளது. மாருதி சுஸுகி எர்டிகா கார் 7 இருக்கைகளை கொண்டது. இதன் நீளம் 4,395 மிமீ ஆகும். எனவே பயணிகளுக்கு இந்த கார் சௌகரியமான பயணத்தை வழங்குகிறது.
அத்துடன் மாருதி சுஸுகி எர்டிகா கார் சிறப்பான மைலேஜ் வழங்க கூடிய ஒன்றாகவும் உள்ளதால், வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது. இதன் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனம் எர்டிகா காருக்கு சரியான விலையை நிர்ணயம் செய்துள்ளது. அத்துடன் இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற மைலேஜையும் மாருதி சுஸுகி எர்டிகா வழங்குகிறது. மேலும் இந்த காரில் நிறைய பேர் பயணம் செய்ய முடியும்.
இது போன்ற காரணங்களால்தான் மாருதி சுஸுகி எர்டிகா காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வழங்கி கொண்டுள்ளனர். இதன் மூலமாகவே அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 13 ஆண்டுகள் கடந்த பின்னரும் (2012ம் ஆண்டு லான்ச் செய்யப்பட்டது), இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகி கொண்டுள்ள கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி எர்டிகா திகழ்கிறது.


Click it and Unblock the Notifications








