27 கிமீ மைலேஜ்! 7 பேர் போகலாம்! ஆனா விலை இவ்ளோதானா! செல்போன் மாதிரி வித்துகிட்டு இருக்கு!
இந்தியாவில் 7 சீட்டர் எம்பிவி ரக கார்களுக்கு (7 Seater MPV Cars) மிகப்பெரிய டிமாண்ட் இருக்கிறது. குறிப்பாக அதிக உறுப்பினர்கள் இருக்கும் பெரிய குடும்பங்களின் முதல் சாய்ஸாக 7 சீட்டர் எம்பிவி ரக கார்கள் திகழ்கின்றன. எம்பிவி ரக கார்களில் 3 வரிசைகள் மூலம் 7 இருக்கைகள் வழங்கப்படுகின்றன. எனவே 7 பேர் பயணம் செய்ய முடியும்.
தேவைப்பட்டால் இருக்கைகளை மடக்கி வைத்து கொண்டு, அதிக லக்கேஜ்களை கொண்டு செல்லலாம். இருக்கைகளை மடக்கி வைக்கும்போது, லக்கேஜ்களை வைக்க தாராளமான இடவசதி கிடைக்கும். நிறைய பேர் பயணம் செய்யலாம் மற்றும் அதிக லக்கேஜ்களை கொண்டு செல்ல முடியும் என்பது போன்ற காரணங்களால்தான், 7 சீட்டர் எம்பிவி ரக கார்கள் பிரபலமாக திகழ்ந்து வருகின்றன.

இந்தியாவில் 7 சீட்டர் எம்பிவி செக்மெண்ட்டில் ஏராளமான கார்கள் கிடைக்கின்றன. ஆனால் இதில் மிகவும் பிரபலமாக இருப்பது மாருதி சுஸுகி எர்டிகாதான் (Maruti Suzuki Ertiga). இந்த கார் ஒவ்வொரு மாதமும் மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.
இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதமும் மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவி கார், வழக்கம் போல் விற்பனையில் அசத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், 16,604 மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Bestselling Cars In July 2025), மாருதி சுஸுகி எர்டிகா 3வது இடத்தை பிடித்துள்ளது. முதல் 2 இடங்களில் முறையே மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) ஆகிய கார்கள் உள்ளன.
இந்த பட்டியலில், மாருதி சுஸுகி எர்டிகா கார், நூலிழையில் மட்டுமே 2வது இடத்தை இழந்துள்ளது. 2வது இடத்தில் உள்ள ஹூண்டாய் க்ரெட்டாவிற்கும், 3வது இடத்தில் உள்ள மாருதி சுஸுகி எர்டிகாவிற்கும் இடையேயான வித்தியாசம் வெறும் 294 யூனிட்கள் மட்டுமே. ஹூண்டாய் க்ரெட்டா காரின் விற்பனை எண்ணிக்கை 16,898 ஆகும்.
இருப்பினும் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 7 சீட்டர் எம்பிவி கார்களின் பட்டியலில் (Top 10 Bestselling 7 Seater MPV Cars In July 2025), மாருதி சுஸுகி எர்டிகா முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருவதற்கு, அது 7 சீட்டர் கார் என்பதுடன், அதன் குறைவான விலை மற்றும் அதிக மைலேஜ் (Mileage) ஆகியவையும் மிகவும் முக்கியமான காரணங்களாக உள்ளன.
மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை தற்போதைய நிலையில் வெறும் 9,11,500 ரூபாயாக மட்டுமே உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். அதே நேரத்தில் இதன் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன.
அத்துடன் மாருதி சுஸுகி எர்டிகா காரின் அனைத்து வேரியண்ட்களிலும் தற்போது ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் என்ற வசதி, மாருதி சுஸுகி எர்டிகா காரில் வெகு சமீபத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் வரும் காலங்களில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








