7 சீட்டர், 27 கிமீ மைலேஜ்! தாத்தா, பாட்டி, அத்தை, மாமான்னு அத்தன பேரும் ஒரே கார்ல போகலாம்! விலை இவ்ளோதானா!

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் 7 சீட்டர் எம்பிவி (7 Seater MPV) ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga). இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதமும், மாருதி சுஸுகி எர்டிகா சிறப்பான விற்பனை எண்ணிக்கையைதான் பதிவு செய்துள்ளது.

ஆனால் விற்பனை சற்று வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இது தெரிய வந்துள்ளது. இதன்படி பார்த்தால், மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 14,151 எர்டிகா கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 15,902 மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

Maruti Suzuki Ertiga Seat

இது 11 சதவீத வீழ்ச்சி ஆகும். ஆனால் இது சிறிய அளவிலான வீழ்ச்சி மட்டுமே என்பதால், மாருதி சுஸுகி நிறுவனம் கூடிய விரைவில் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அரேனா ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரு கார் ஆகும்.

மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை 8.97 லட்ச ரூபாயாக உள்ளது. ஸ்மார்ட் ஹைப்ரிட் எல்எக்ஸ்ஐ (ஓ)வேரியண்ட்டின் விலை ஆகும். அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 13.26 லட்ச ரூபாயாக உள்ளது. இது ஸ்மார்ட் ஹைப்ரிட் இஸட்எக்ஸ்ஐ+ ஏடி வேரியண்ட்டின் விலை ஆகும். இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

Maruti Suzuki Ertiga

மாருதி சுஸுகி எர்டிகா காரில், 17.78 செமீ ஸ்மார்ட்ப்ளே ப்ரோ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், சுஸுகி கனெக்ட் கனெக்டட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் என ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்படுகின்றன.

பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், இபிடி உடன் ஏபிஎஸ், பிரேக் அஸிஸ்ட், ஹில் ஹோல்டு தொழில்நுட்பம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா போன்றவை எல்லாம் இந்த காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.

அதே சமயம் இந்த காரின் வேரியண்ட்களிலேயே அதிகபட்சமாக சிஎன்ஜி/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்குகின்றன. இது 7 இருக்கைகளை கொண்ட ஒரு கார் ஆகும். ஒரு 7 சீட்டர் கார் இவ்வளவு அதிக மைலேஜ் வழங்குவதாலும், மாருதி சுஸுகி எர்டிகா காரை தேர்வு செய்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா கேரன்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெகு சமீபத்தில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய மாடலின் வருகை, அதன் நேரடி போட்டி மாடலான, மாருதி சுஸுகி எர்டிகா காருக்கு விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனினும் மாருதி சுஸுகி எர்டிகா இந்திய சந்தையில் தனி வாடிக்கையாளர்கள் வட்டத்தை கொண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு என்பதே இதற்கு காரணம். எனவே மாருதி சுஸுகி எர்டிகா கார் விரைவிலேயே வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, July 14, 2025, 23:19 [IST]
English summary
Maruti suzuki ertiga sales report june 2025 11 per cent down
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+