பைக் மாதிரி மைலேஜ் குடுக்கும் 7 சீட்டர் கார்! விலையை கேட்றாதீங்க! கண்டிப்பா வாங்கியே ஆகணும்னு ஆசை வந்துரும்!
இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் ஒரு எம்பிவி ரக காரை வாங்க வேண்டுமென்றால், அனைவரின் மனதிற்கும் முதலில் நினைவிற்கு வருவது, கண்டிப்பாக மாருதி சுஸுகி எர்டிகாவாகதான் (Maruti Suzuki Ertiga) இருக்கும். இந்திய சந்தையில் கடந்த 2012ம் ஆண்டு மாருதி சுஸுகி எர்டிகா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த கார் விற்பனைக்கு வந்து கிட்டத்தட்ட 13 வருடங்கள் கடந்து விட்டன. ஆனால் தற்போதும் கூட ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை மாருதி சுஸுகி எர்டிகா பதிவு செய்து வருகிறது. நடப்பு 2025ம் ஆண்டு மே மாதமும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் 16,140 மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 13,893 ஆக மட்டுமே இருந்தது. அதாவது 2,247 மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளன.
இது 16 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars May 2025), மாருதி சுஸுகி எர்டிகா 2வது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் இருப்பது மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) ஆகும்.

மாருதி சுஸுகி எர்டிகா காரின் விற்பனை கடந்த 2024ம் ஆண்டு மே மாதத்துடன் மட்டுமல்லாது, நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட்டாலும், சிறப்பான வளர்ச்சியைதான் சந்தித்துள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15,780 மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.
ஆனால் இந்த எண்ணிக்கை, அதன் பின் வந்த மே மாதம், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி 16,140 ஆக உயர்ந்துள்ளது. அதாவது இந்த வகையில் பார்த்தால், 360 மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2.23 சதவீத வளர்ச்சி ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை வெறும் 8.97 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். அதே நேரத்தில் இதன் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு அதிகபட்சமாக 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இது அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும்.
ஓரளவிற்கு குறைவான விலை, நிறைவான மைலேஜ் ஆகிய காரணங்களால்தான், மாருதி சுஸுகி எர்டிகா காரை வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு வாங்கி கொண்டுள்ளனர் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. அத்துடன் 7 பேர் பயணம் செய்ய முடியும் என்பது மாருதி சுஸுகி எர்டிகா காரின் கூடுதல் பலம் ஆகும்.


Click it and Unblock the Notifications








