27 கிமீ மைலேஜ்! டொயோட்டா இன்னோவாக்கு எல்லாம் அப்பன்! இவ்ளோ கம்மியான விலையில் 7 சீட்டர் காரா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் 7 சீட்டர் எம்பிவி ரக கார்களில் (7 Seater MPV Cars) ஒன்று மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga). இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், 16,197 மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம், 15,150 மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

Maruti Suzuki Ertiga Seat

அதாவது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 1,047 மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மாருதி சுஸுகி எர்டிகா கார் விற்பனையில் 7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

அத்துடன் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars November 2025), மாருதி சுஸுகி எர்டிகா கார், 6வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் 5 இடங்களில் முறையே டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி டிசையர், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய கார்கள் உள்ளன.

Maruti Suzuki Ertiga

இந்த வரிசையில் மாருதி சுஸுகி எர்டிகா கார் 6வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 8.80 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 12.94 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இவை மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இதன் மூலமாக கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) போன்ற எம்பிவி கார்களுக்கு எல்லாம் மிகவும் விலை குறைவான மாற்று ஆப்ஷனாக மாருதி சுஸுகி எர்டிகா திகழ்கிறது.

இது மிகவும் விலை குறைவானது என்பதுடன், அதிக மைலேஜ் வழங்க கூடிய கார்களில் ஒன்றாகவும் இருக்கிறது. மாருதி சுஸுகி எர்டிகா காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க, அதே நேரத்தில் பராமரிப்பதற்கு மிகவும் எளிமையான ஒரு எம்பிவி ரக காரை எதிர்பார்க்க கூடிய அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களுக்கு மாருதி சுஸுகி எர்டிகா மிகவும் ஏற்றதாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 10, 2025, 23:47 [IST]
English summary
Maruti suzuki ertiga sales report november 2025 7 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+