டொயோட்டா இன்னோவாக்கு அப்பன்! அடிமாட்டு விலையில் 7 சீட்டர் கார்! ஒரு வீட்டையே காலி பண்ணி லக்கேஜையும் ஏத்தீரலாம்

இந்திய சந்தையில் எம்பிவி ரக கார்களுக்கு (MPV Cars) மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டம் உள்ளது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta), கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) என ஏராளமான எம்பிவி ரக கார்கள் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ளன.

ஆனால் இந்த கார்களுக்கு எல்லாம் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து கொண்டிருக்கும் எம்பிவி ரக கார் எது என கேட்டால், மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) என பச்சை குழந்தை கூட சரியாக கூறி விடும். டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் ஆகிய கார்கள் உடன் ஒப்பிடும்போது, மாருதி சுஸுகி எர்டிகா காரின் விலை மிகவும் குறைவு.

Maruti Suzuki Ertiga Seat

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 18.66 லட்ச ரூபாய் ஆக இருக்கிறது. அதே நேரத்தில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் டாப் வேரியண்ட்டின் விலை 25.36 லட்ச ரூபாய் ஆக உள்ளது.

மறுபக்கம் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 11.08 லட்ச ரூபாய் ஆக இருக்கிறது. அதே நேரத்தில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 19.27 லட்ச ரூபாய் ஆக உள்ளது. இவை அனைத்துமே டொயோட்டா மற்றும் கியா நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

Maruti Suzuki Ertiga

ஆனால் மாருதி சுஸுகி எர்டிகா கார், இவற்றை காட்டிலும் மிகவும் விலை குறைவானது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி பார்த்தால், எர்டிகா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 8.80 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 12.94 லட்ச ரூபாய் மட்டும்தான்.

இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலைதான். விலை குறைவானது என்பதுடன், 7 பேர் பயணம் செய்ய முடியும் என்பதாலும், இதன் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்குவதாலும், மாருதி சுஸுகி எர்டிகா கார், இந்தியாவின் எம்பிவி செக்மெண்ட்டின் 'கிங்'-ஆக திகழ்கிறது.

நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலும் கூட, இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட எம்பிவி கார் (Most Sold MPV Car) என்ற பெருமையை, வழக்கம் போல மாருதி சுஸுகி எர்டிகாதான் தன்வசப்படுத்தியுள்ளது. மாருதி சுஸுகி எர்டிகா காரின் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம், 20,087 மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெறும் 18,785 மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 1,302 மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மாருதி சுஸுகி எர்டிகா கார் விற்பனையில் 7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

அத்துடன் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars October 2025), மாருதி சுஸுகி எர்டிகா 3வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலின் முதல் இடத்தில் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த டாடா நெக்ஸானும் (Tata Nexon), 2வது இடத்தில் செடான் ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி டிசையரும் (Maruti Suzuki Dzire) உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: குறைவான விலை, அதிக மைலேஜ் ஆகிய சிறப்பம்சங்கள் உடன், லக்கேஜ்களை வைத்து கொள்ள ஏதுவாக 209 லிட்டர்கள் பூட் ஸ்பேஸ் (3வது வரிசை இருக்கைகளை மடக்கி வைத்து கொண்டால் 803 லிட்டர்களாக அதிகரித்து கொள்ள முடியும்), பாதுகாப்பிற்கு அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்றவை எல்லாம், மாருதி சுஸுகி எர்டிகா காரின் கூடுதல் ப்ளஸ் பாயிண்ட்கள் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 11, 2025, 14:18 [IST]
English summary
Maruti suzuki ertiga sales report october 2025 7 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+