27 கிமீ மைலேஜ் தரும் 7 சீட்டர் கார இந்த ரேட்ல விக்கறாங்களா! விடிஞ்சதும் மொத வேலையே ஷோரூமுக்கு போறதுதான்!

இந்திய சந்தையில் 7 சீட்டர் எம்பிவி ரக கார்களுக்கு (7 Seater MPV Cars) எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். இங்கு கூட்டு குடும்பங்களின் எண்ணிக்கை அதிகம். எனவே 7 சீட்டர் எம்பிவி ரக கார்கள்தான், நிறைய பேர் ஒன்றாக பயணம் செய்வதற்கு ஏற்றதாக இருக்கும். இதன் காரணமாகவே 7 சீட்டர் எம்பிவி ரக கார்களுக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

இந்த செக்மெண்ட்டில் ஏராளமான கார்கள் விற்பனைக்கு கிடைத்தாலும் கூட, மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) கார்தான், இந்த செக்மெண்ட்டின் கிங் ஆக திகழ்கிறது. மாருதி சுஸுகி எர்டிகா கார் ஒவ்வொரு மாதமும் மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மாருதி சுஸுகி எர்டிகாவிற்கு சிறப்பாக அமையவில்லை.

Maruti Suzuki Ertiga Seat

ஆம், மாருதி சுஸுகி எர்டிகா கார் விற்பனையில் மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது. இதன்படி பார்த்தால், மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12,115 எர்டிகா கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 17,441 ஆக இருந்தது. அதாவது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 5,326 மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 31 சதவீத வீழ்ச்சி ஆகும்.

Maruti Suzuki Ertiga

இதன் காரணமாக இந்திய சந்தையில் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars September 2025), மாருதி சுஸுகி எர்டிகாவிற்கு 10வது மற்றும் கடைசி இடம் மட்டுமே கிடைத்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் 9 இடங்களில் முறையே டாடா நெக்ஸான், மாருதி சுஸகி டிசையர், ஹூண்டாய் க்ரெட்டா, மஹிந்திரா ஸ்கார்பியோ, டாடா பன்ச், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், மாருதி சுஸுகி வேகன் ஆர், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் மற்றும் மாருதி சுஸுகி பலேனோ ஆகிய கார்கள் உள்ளன.

இந்த வரிசையில் 10வது மற்றும் கடைசி இடம் பிடித்துள்ள மாருதி சுஸுகி எர்டிகா கார் தற்போதைய நிலையில் வெறும் 8.80 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையிலேயே கிடைக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 12.94 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

அதே நேரத்தில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக உள்ளன. மாருதி சுஸுகி எர்டிகா நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 4,395 மிமீ ஆகவும், 1,735 மிமீ ஆகவும், 1,690 மிமீ ஆகவும் உள்ளன.

அதே நேரத்தில் மாருதி சுஸகி எர்டிகா காரின் வீல்பேஸ் நீளம் 2,740 மிமீ ஆக இருக்கிறது. எனவே 7 பேர் சௌகரியமாக பயணம் செய்ய கூடிய காராக மாருதி சுஸுகி எர்டிகா உள்ளது. ஓரளவிற்கு குறைவான விலையில், அதிக மைலேஜ் வழங்க கூடிய, அதே நேரத்தில் அதிகம் பேர் பயணம் செய்ய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி எர்டிகா ஏற்றது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) போன்ற கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி எர்டிகா மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. அத்துடன் மாருதி சுஸுகி எக்ஸ்எல் 6 (Maruti Suzuki XL 6) காருக்கும் கூட, இது மிகவும் சிறந்த மாற்று ஆப்ஷன்தான்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 14, 2025, 22:42 [IST]
English summary
Maruti suzuki ertiga sales report september 2025 31 per cent down
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+