இப்பவே ஷோரூம்ல போய் லைன்ல நின்னு புக் பண்ணா தான் தீபாவளிக்கு இந்த கார் கிடைக்கும்!
மாருதி நிறுவனத்தின் எர்டிகா காருக்கு நாளுக்கு நாள் டிமாண்ட் அதிகமாகி கொண்டே வருகிறது. ஏகப்பட்ட மக்கள் இந்த காரை புக் செய்து வருகின்றனர். தயாரிப்பை தாண்டி புக்கிங் குவிவதால் இந்த காருக்கான காத்திருப்பு காலம் அதிகமாகியுள்ளது. நீண்ட ஆண்டுகளாக விற்பனையில் இருக்கும் காருக்கு அதிக காத்திருப்பு காலம் வருவது ஆச்சரியமான விஷயம் தான். இந்த காத்திருப்பு காலம் குறித்த விரிவான விபரங்களை காணலாம்
மாருதி சுஸூகி நிறுவனம் விற்பனை செய்யும் எர்டிகா காரை பொருத்தவரை குறைந்த விலையில் பிராக்கடிக்கல் அம்சம் கொண்ட எம்பிவி காராக இருக்கிறது. இந்த கார் வடிவமைப்பிலும் அம்சங்களிம் சிறந்த காராக இருக்கிறது. இந்த கார் மொத்தம் 4 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ+ ஆகிய வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது.

இந்த காரில் 2 விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. மைல்டு ஹைபிரிட் மற்றம் சிஎன்ஜி ஆகிய இரண்டு விதமான ஆப்ஷன்களும் உள்ளன. இந்த காரை நீங்கள் வாங்க வேண்டும் என்றால் நீங்கள் அதிகம் காத்திருக்க வேண்டும். இந்த காருக்கான காத்திருப்பு காலம் ஒவ்வொரு நகரத்திற்கும் மாறுபடுகிறது.
பெரும்பாலும் இந்த கார்களுக்கு 2 மாதங்களுக்கு மேல் இருக்கிறது. நொய்டா, பாட்னா, தானே, கூர்கான், லக்னோ, புதுடில்லி, ஆகிய நகரங்களில் 1 மாத இடைவெளி இருக்கிறது. ஹைதராபாத்தில் 1.5 மாதங்களும், ஆமதாபாத், சென்னை, காஸியாபாத், ஆகிய நகரங்களில் 1-2 மாதங்கள் வரை காத்திருப்பு காலமும், புனேவில் 1.5-2 மாதங்கள் காத்திருப்பு காலம் இருக்கிறது.

பெங்களூரு, கொல்கத்தா, சண்டிகர், ஃபரிதாபாத் ஆகிய நகரங்களில் 2 மாதங்களில் காத்திருப்பு காலம் இருக்கிறது. மும்பை, ஜெய்ப்பூர், கோயம்புத்தூர், இந்தூர் ஆகிய நகரங்களில் 2.5 மாதங்கள் வரை காத்திருப்பு காலங்கள் இருக்கிறது. இவ்வளவு அதிக காலம் காத்திருப்பு காலம் இருப்பதற்கு முக்கியமான காரணம் அதிக புக்கிங் தான்.
இந்த எர்டிகா காரில் பல பயனுள்ள அம்சங்கள் உள்ளது. இந்த கார் 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக உள்ளது. மேலும் இதன் பின்பக்க ஸ்பாயிலர்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 1 ஃபாஸ்ட் யூஎஸ்பி சார்ஜர் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது. இந்த காிரன் விலையை பொருத்தவரை ரூ9.11 லட்சம் முதல் ரூ13.40 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

இந்த கார் நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
இந்த காரை மக்கள் பலர் விரும்பி வாங்கி வருகின்றனர். இதனால் இதன் டிமாண்ட் அதிகமாகியுள்ளது. மக்கள் விரும்பி வாங்க காரணம் இதன் மைலேஜ் தான். இந்த கார் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 26.11 கி.மீ மைலேஜை வழங்குகிறது. இதனால் பயண செலவு குறைவாக இருக்கும் இது போக குடும்பமாக பயணிக்க இந்த கார் ஏற்றதாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனத்தின் சுஸூகி எர்டிகா கார் அதிக டிமாண்ட் உள்ளது. இந்நிலையில் இதன் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் வேறு வருகிறது. இதனால் அடுத்த சில மாதங்களுக்கு இந்த காரின் விற்பனை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். தீபாவளிக்கு இந்த காரை வாங்க வேண்டும் என்றால் இப்பொழுதே ஷோரூம் சென்று காரை புக் செய்தால் தான் உண்டு.


Click it and Unblock the Notifications









