கம்மி விலை, அதிக இட வசதி, மாருதி எஸ்குடோ எஸ்யூவி கார் சிக்கீரமே வரப்போகுது!
மாருதி நிறுவனம் இந்தியாவில் புதிய எஸ்யூவி காரை களம் இறக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த காருக்கு அந்நிறுவனம் எஸ்குடோ என பெயர் வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்கும்? இதை விலை எவ்வளவு இருக்கும்? மார்கெட்டில் உள்ள எந்த காருக்கு போட்டியாக இந்த கார் விற்பனையாகும்? விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.
இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி நிறுவனம் தற்போது தனது எஸ்யூவி வரிசையை விரிவுபடுத்தும் எண்ணத்தில் இருக்கிறது. தற்போது காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் பிரெஸ்ஸா மற்றம் கிராண்ட் விட்டாரா ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த இரண்டு கார்களுக்கும் இடைபட்ட காராக புதிய எஸ்யூவி காரை களம் இறக்க தயாராக உள்ளது.

இந்த காருக்கு மாருதி நிறுவனம் எஸ்குடோ என பெயர் வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி நிறுவனம் ஏற்கனவே எஸ்குடோ மற்றும் டார்க்நாடோ ஆகிய பெயர்களை டிரேட் மார்க் செய்து வைத்திருக்கும் நிலையில் தற்போது எஸ்குடோ என்ற பெயரில் புதிய காரை களம் இறக்க தயாராகி வருகிறது. அடுத்தாக டார்க்நாடோ என்ற காரும் தயாராக வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இந்த புதிய மாருதி எஸ்குடோ கார் பிரெஸ்ஸா காருக்கும் கிராண்ட் விட்டாரா காருக்கும் இடையில் பொசிஷன் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்க முக்கியமான காரணம் இந்த எஸ்குடோ கார் பிரெஸ்ஸா காரை விட அளவில் பெரியதாகவும், கிராண்ட் விட்டாரா காரை விட சற்று சிறியதாகவும் வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் தீபாவளியை முன்னிட்டு இந்த காரை களம் இறக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த கார் மார்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஹோண்டா எலவேட், எம்ஜி அஸ்டர் ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கப்ப்படுகிறது. மாருதி நிறுவனம் எஸ்குடோ காரை சுஸூகியின் குளோபல் சி பிளாட்ஃபார்மில் தான் உருவாக்குகிறது. இந்த பிளாட்ஃபார்மில் தான் கிராண்ட் விட்டாரா காரும் தயாராகிறது. எஸ்குடோ காரில் கிராண்ட் விட்டாரா காரை விட பெரிய வீல் பேஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காரில் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோவை சப்போர்ட் செய்யும் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சன்ரூஃப், வென்டிலேட்டட் சீட்டுகள், ஸ்மார்ட் கனெக்டிவிட்டி, வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

இந்த காரில் உள்ள இன்ஜினை பெஆரத்தவரை 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்துடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் தான் பிரெஸ்ஸா மற்றும் எர்டிகா காரிலும் இரக்கிறது. இந்த காரில் சிஎன்ஜி வேரியன்டும் வெளியாக வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காரில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இஎஸ்சி, 360 டிகிரி கேமரா, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் இந்த காரின் பாதுகாப்பிற்காக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த கார் பாதுகாப்பு விஷயத்திலும் சிறந்த காராக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் விற்பனைக்கு வந்தால் நிச்சயம் மிகப்பெரிய அளவில் விற்பனையாகும்
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி நிறுவனத்தின் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்நிறுவனம் தற்போது மார்கெட்டில் நல்ல விற்பனையை பெற்று வரும் நிலையில் எஸ்யூவி செக்மெண்டில் தனது பலமான காலடியை பதிக்க புதிய காரை களம் இறக்குகிறது. இந்த காரின் விற்பனையும் நிச்சயம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









