டாடா, மஹிந்திராவை கதற விடும் மாருதி கார்! 29 கிமீ மைலேஜ்! ஆனா தரமட்ட ரேட்ல வித்து தள்ளீட்டு இருக்காங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx). கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில்தான் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக 2023ம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.
ஆனால் அதற்குள்ளாகவே 5 லட்சம் யூனிட்கள் உற்பத்தி என்ற பிரம்மாண்டமான மைல்கல்லை (Production Milestone) மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கடந்துள்ளது. 1 லட்சம் யூனிட்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் கடந்தது.

இதை தொடர்ந்து 2 லட்சம் யூனிட்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதமும், 3 லட்சம் யூனிட்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதமும், 4 லட்சம் யூனிட்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கடந்தது.
இந்த வரிசையில் 5 லட்சம் யூனிட்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கடந்துள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் காரணத்தால்தான், மிக குறுகிய காலத்தில் 5 லட்சம் யூனிட்கள் உற்பத்தி என்ற பிரம்மாண்டமான மைல்கல்லை, மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் கடந்துள்ளது.

இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். அதேபோல் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் கார்களில் ஒன்றாகவும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் திகழ்கிறது.
மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில், 1.2 லிட்டர் கே-சீரிஸ் ட்யூயல் ஜெட் பெட்ரோல் இன்ஜின், 1.0 லிட்டர் கே-சீரிஸ் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.2 லிட்டர் சிஎன்ஜி ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. இதில், சிஎன்ஜி இன்ஜின்தான் அதிக மைலேஜ் வழங்க கூடியது ஆகும்.
அதன் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 28.51 கிலோ மீட்டர் என மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதிக மைலேஜ் வழங்க கூடியது என்பதுடன், பாதுகாப்பானதும் கூட. ஏனெனில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.
ஹார்ட்டெக்ட் பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைண்டர் மற்றும் ரியர் டீஃபாகர் போன்ற பாதுகாப்பு வசதிகள் (Safety Features) எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் 22.86 செமீ ஸ்மார்ட்ப்ளே ப்ரோ ப்ளஸ் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 360 வியூ கேமரா, வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் 40க்கும் மேற்பட்ட கனெக்டட் கார் தொழில்நுட்ப வசதிகள் ஆகியவற்றையும், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கொண்டுள்ளது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 7.59 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO), கியா சொனெட் (Kia Sonet), டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) ஆகிய கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








