29 கிமீ மைலேஜ்! 6 ஏர்பேக்! ஆனா விலை இவ்ளோதானா! போட்டி நிறுவனங்களை தொடை நடுங்க வைக்கும் மாருதி கார்!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் கார்களின் பாதுகாப்பை மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களில் 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டு வருகின்றன. அதாவது அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் வசதி இருக்கும்.

மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6), மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) மற்றும் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) போன்ற கார்களில், சமீபத்தில் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

Maruti Suzuki Fronx Airbags

இந்த வரிசையில், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) காரின் அனைத்து வேரியண்ட்களிலும் தற்போது ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வசதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அப்டேட் காரணமாக மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் விலை 0.5 சதவீதம் உயர்ந்துள்ளது.

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இதை நிரூபிக்கும் வகையிலான அறிவிப்பு ஒன்றை மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இதன்படி வெறும் 25 மாதங்களில், இந்தியாவில் இருந்து 1 லட்சம் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

Maruti Suzuki Fronx

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், 1.2 லிட்டர் இன்ஜின் உடன் சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் இன்ஜின்களிலேயே அதிக மைலேஜ் வழங்க கூடியது இந்த சிஎன்ஜி இன்ஜின்தான்.

இதன் மைலேஜ் (Mileage) ஒரு கிலோவிற்கு 28.51 கிலோ மீட்டர் என மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், 360 டிகிரி கேமரா, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ ப்ளஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் என ஏராளமான வசதிகளும் (Features) வழங்கப்படுகின்றன.

இந்த வரிசையில் தற்போது, அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வசதி மூலம், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 7.54 லட்ச ரூபாய் மட்டுமே.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13.07 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போது குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் விற்பனை ஏற்கனவே மிகவும் சிறப்பாகதான் இருந்து வருகிறது. இந்த சூழலில் தற்போது ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் வசதி வழங்கப்பட்டுள்ளதால், இனி மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் விற்பனை மேலும் உயரலாம் என நாங்கள் கருதுகிறோம்.

இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) ஆகிய கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 26, 2025, 13:06 [IST]
English summary
Maruti suzuki fronx gets 6 airbags as standard check all details here
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+