பெட்ரோல், எலக்ட்ரிக் இரண்டிலும் இயங்கக்கூடிய கார் என்றால் எல்லாரும் வாங்க போறாங்க... மாருதியின் பக்கா பிளான்!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம், சமீப காலமாக ஹைப்ரீட் (Hybrid) கார்களில் முனைப்பு காட்டி வருகிறது. அதாவது, பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் என இரு விதமான எரிபொருட்களிலும் இயங்கக்கூடிய கார்களை உருவாக்குவதில் மாருதி சுஸுகி ஆர்வமாக உள்ளது. அதன் வெளிப்பாடாக, ஃபிரான்க்ஸ் ஹைப்ரீட் (Fronx Hybrid) காரை உருவாக்கும் பணிகளில் மாருதி சுஸுகி ஈடுப்பட்டுவரும் நிலையில், அந்த கார் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகியில் இருந்து சமீப காலத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட லேட்டஸ்ட் அறிமுக கார், ஃபிரான்க்ஸ் ஆகும். கடந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஃபிரான்க்ஸ் காரை அப்போது நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo) கண்காட்சியில் மாருதி சுஸுகி அறிமுகம் செய்தது.

maruti suzuki fronx

அதன்பின், ஏப்ரல் மாதத்தில் விலைகள் அறிவிக்கப்பட்டு, ஃபிரான்க்ஸ் கார்கள் கஸ்டமர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்டன. இந்த நிலையில்தான், ஃபிரான்க்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 2 வருடங்களாகிவிட்ட நிலையில், ஃபிரான்க்ஸ் காரில் ஹைப்ரீட் வெர்சனை கொண்டுவர மாருதி சுஸுகி தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஃபிரான்க்ஸ் ஹைப்ரீட் கார் ஒன்று சாலையில் ஓட்டி பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலம் குருக்கிராம் நகரத்தின் சாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்டத்தில் ஃபிரான்க்ஸ் ஹைப்ரீட் காரின் பின்பக்கத்தில் 'Hybrid' என்கிற முத்திரை பொருத்தப்பட்டுள்ளதை பார்க்கலாம். குருக்கிராம் நகரத்திற்கு அருகே தான் மாருதி சுஸுகியின் கார்கள் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆதலால், இந்த ஃபிரான்க்ஸ் ஹைப்ரீட் காரில் பொருத்தப்பட்டுள்ள ஹைப்ரீட் சிஸ்டம் ஆனது மாருதி சுஸுகியின் தொழிற்சாலையில் தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

maruti suzuki fronx hybrid spotted

மாருதி சுஸுகியில் இருந்து ஹைப்ரீட் கார்கள் ஒன்றும் புதியது கிடையாது. இதற்கு முன்னர் ஏற்கனவே கிராண்ட் விட்டாரா ஹைப்ரீட் (Grand Vitara Hybrid) காரை மாருதி சுஸுகி அறிமுகம் செய்து, விற்பனை செய்து கொண்டிருக்கிறது. கிராண்ட் விட்டாரா ஹைப்ரீட் காரில் டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் உதவியுடன் மாருதி சுஸுகி உருவாக்கிய ஹைப்ரீட் சிஸ்டம் பொருத்தப்படுகிறது.

ஆனால், புதிய ஃபிரான்க்ஸ் ஹைப்ரீட் காரில் புதுமையான ஹைப்ரீட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த புதிய ஹைப்ரீட் சிஸ்டம் குறித்து மாருதி சுஸுகி நிறுவனம் இதுவரையில் எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும், இந்த சிஸ்டத்தில் காரின் பேட்டரிகளுக்கான ஜெனரேட்டராக பெட்ரோல் என்ஜின் செயல்படக்கூடியதாக இருக்கும்.

maruti suzuki fronx hybrid spotted

காருக்கு பின்னால் ஹைப்ரீட் முத்திரை வழங்கப்பட்டு இருப்பதை தவிர்த்து, வழக்கமான ஃபிரான்க்ஸ் காருக்கும், இதற்கும் பெரியதாக தோற்றத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. இருந்தாலும், புதிய காரை சோதனை ஓட்டத்தில் உட்படுத்தும் போது காரின் தோற்றம் வெளியே தெரியாதவாறு மறைக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த சோதனை ஓட்ட ஃபிரான்க்ஸ் ஹைப்ரீட் கார் ஆனது எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்பட்டு இல்லை. ஆதலால், இந்த கார் அறிமுகத்தை நெருங்கிவிட்டது என்றே எதிர்பார்க்கிறோம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹைப்ரீட் கார்களுக்கு மெல்ல மெல்ல வரவேற்பு அதிகரித்து வருகிறது. மாருதி சுஸுகியும் ஹைப்ரீட் கார்கள் விஷயத்தில் தீவிரமாக ஈடுப்பட்டு வருவதால், வரும் காலங்களில் ஹைப்ரீட் கார்களின் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். எலக்ட்ரிக் கார்கள் தான் எதிர்காலம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டாலும், அந்த காலம் வரும் வரையில் ஹைப்ரீட் கார்களுக்கும் தேவை இருக்கும்.

Source: Team BHP

More from DriveSpark

Article Published On: Monday, January 27, 2025, 23:59 [IST]
English summary
Maruti suzuki fronx hybrid car spotted while testing in haryana
மேலும்... #maruti suzuki #hybrid car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X