லிட்டருக்கு 21கிமீ மைலேஜ் தரும் இந்த மாருதி காரை வாங்க தேடி ஓடிவரும் மக்கள்! டாடாவின் ஆதிக்கம் இனி அவ்வளவுதானா
இந்தியாவில் எஸ்யூவி (SUV) ரக கார்களுக்கு தான் கடந்த சில ஆண்டுகளாக நல்ல வரவேற்பு மக்களிடம் இருந்து கிடைத்து வருகிறது. குறிப்பாக, குறைந்த விலையில், அளவில் சிறியதாக கிடைக்கக்கூடிய சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களுக்கு தான் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர். இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக கார் நிறுவனங்களும் முடிந்தவரையில் 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்யும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றன. இதனாலேயே தற்சமயம் இந்தியாவில் சுமார் 14 சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன என சொன்னால் நம்ப முடிகிறதா?
இந்த 14 சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் மாடல்கள் மொத்தமாக கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 517 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 1,13,517 சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்கள் மக்களால் வாங்கப்பட்டுள்ளன.

அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெறும் 96 ஆயிரத்து 715 சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த ஆண்டு பிப்ரவரியை காட்டிலும் இந்த ஆண்டு பிப்ரவரியில் 16 ஆயிரத்து 792 சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் மக்களால் வாங்கப்பட்ட சப்-4 மீட்டர் எஸ்யூவி காராக முதலிடத்தை மாருதி சுஸுகியின் ஃபிரான்க்ஸ் (Fronx) பிடித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 21 ஆயிரத்து 461 ஃபிரான்க்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2024 பிப்ரவரி மாதத்தில் வெறும் 14 ஆயிரத்து 168 ஃபிரான்க்ஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் பார்த்தால், கடந்த மாதத்தில் 7 ஆயிரத்து 293 ஃபிரான்க்ஸ் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்து 2வது இடத்திலும் மாருதி சுஸுகியின் மற்றொரு சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரான பிரெஸ்ஸா (Brezza) உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட பிரெஸ்ஸா கார்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 392 ஆகும்.
கடந்த ஆண்டு பிப்ரவரியிலும் ஏறக்குறைய இதே எண்ணிக்கையிலான பிரெஸ்ஸா கார்கள் தான் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 3வது மற்றும் 4வது இடங்களில் டாடா மோட்டார்ஸின் 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்களான நெக்ஸான் மற்றும் பஞ்ச் உள்ளன. இவற்றின் கடந்த பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 15,349 மற்றும் 14,559 ஆகும்.

இதில், டாடா பஞ்ச் ஆனது 2024 பிப்ரவரி மாதத்தில் சுமார் 18 ஆயிரத்து 438 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு, இந்த லிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவற்றிற்கு அடுத்து 5வது இடத்தில் ஹூண்டாய் வென்யூ 10,125 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. 2024 பிப்ரவரியில் 8,933 வென்யூ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 6வது இடத்தில் மஹிந்திராவின் எக்ஸ்யூவி 3.எக்ஸ்.ஓ கார் 7,861 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது.
7வது மற்றும் 8வது இடங்களில் கியாவின் சொனெட் மற்றும் சைரோஸ் கார்கள் முறையே 7,598 மற்றும் 5,425 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளன. 9வது இடத்தில் உள்ள மற்றொரு கொரியன் ஸ்டைல் எஸ்யூவி காரான ஹூண்டாய் எக்ஸ்டர் கடந்த மாதத்தில் 5,361 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த டாப்-10 லிஸ்ட்டின் கடைசி 10வது இடத்தில் ஸ்கோடாவின் சமீபத்திய அறிமுகமான கைலாக் (3,636) உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை இல்லாமல், டொயோட்டா டைசர், நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர் மற்றும் மாருதி சுஸுகி ஜிம்னி உள்ளிட்ட சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களும் நம் நாட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவில் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், டாடா பஞ்ச் காரின் விற்பனை மாதத்திற்கு மாதம் குறைந்துக் கொண்டே வருவது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு பெரிதும் தலைவலியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









