29 கிமீ மைலேஜ் கார தரமட்ட ரேட்ல வித்து தள்றாங்க! மார்க்கெட்டை தலைகீழா புரட்டி போடாம விட மாட்டாங்கலாட்ட இருக்கு
மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) காருக்கு இந்திய சந்தையில் அறிமுகமே தேவையில்லை. மாருதி சுஸுகி பலேனோ காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள (Coupe Crossover) ரக காரான மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo) வாகன திருவிழாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. அதை தொடர்ந்து அதே ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 2 வருடங்கள் மட்டுமே கடந்துள்ளன.
ஆனால் அதற்குள்ளாகவே 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டன. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் 1 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை (Sales Milestone) வெறும் 10 மாதங்களிலேயே கடந்து விட்டது. இதுவே மிகவும் விரைவான ஒரு சாதனைதான்.

ஆனால் இதற்கு பிறகு, மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் விற்பனை, இன்னும் ராக்கெட் வேகம் எடுத்துள்ளது. அதாவது அடுத்தடுத்த 1 லட்சம் யூனிட்கள் தலா 7 மாதங்களிலேயே விற்பனையாகி உள்ளன. இதன்படி பார்த்தால் வெறும் 24 மாதங்களிலேயே ஒட்டுமொத்தமாக 3 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற பிரம்மாண்டமான மைல்கல்லை மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கடந்துள்ளது.
மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் மாதம் தவறாமல் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருவதால்தான், இது போன்ற பிரம்மாண்டமான மைல்கல்களை எல்லாம், அனாயசமாக கடக்க முடிகிறது. இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு உதாரணம். நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 14,345 ஃப்ரான்க்ஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் அதற்கு முந்தைய மார்ச் மாதம் 13,669 மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது மார்ச் உடன் ஒப்பிடும்போது ஏப்ரலில் 676 மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars), மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் 8வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் 7வது இடத்தில் உள்ள மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காருக்கும், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காருக்கும் இடையேயான வித்தியாசம் வெறும் 247 யூனிட்கள் மட்டுமே.
அதாவது நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14,592 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் விற்பனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சிறப்பாக இருந்து வருவதால், வரும் காலங்களில் இன்னும் பல்வேறு பிரம்மாண்டமான விற்பனை மைல்கல்களை கடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஆரம்ப விலை வெறும் 7.54 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். அதே நேரத்தில் இந்த காரின் சிஎன்ஜி இன்ஜின் இருப்பதிலேயே அதிகபட்சமாக 28.51 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாக இருக்கிறது.
அத்துடன் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கனெக்டட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், 360 டிகிரி கேமரா மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே போன்ற பல்வேறு அதிநவீன வசதிகளும் (Features) வழங்கப்படுகின்றன. எனினும் வேரியண்ட்களை (Variants) பொறுத்து வசதிகள் மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆனால் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் குறை என்னவென்றால், ஏர்பேக் எண்ணிக்கை குறைவாக இருப்பதுதான். மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் டாப் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகிறதுதான். ஆனால் ஆரம்ப நிலை வேரியண்ட் முதல் டாப் வேரியண்ட் வரை அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டால் நன்றாக இருக்கும்.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் பெரும்பாலான கார்களில் தற்போது, ஆரம்ப நிலை வேரியண்ட் முதல் டாப் வேரியண்ட் வரை அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன. எனவே மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரிலும், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட வேண்டும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த எதிர்பார்ப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் பூர்த்தி செய்யப்படும் என நாங்கள் கருதுகிறோம். ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டால், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் விற்பனை இன்னும் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








