29 கிமீ மைலேஜ் தரும் கார் விலை இவ்ளோ குறையுதா! விஜய்யை பாக்க வர்ற கூட்டத்த விட ஷோரூம்ல அதிக கூட்டம் கூட போகுது

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx). எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

கார்தேக்கோ தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 12,422 ஃப்ரான்க்ஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த எண்ணிக்கை, 12,387 ஆக இருந்தது.

Maruti Suzuki Fronx Front View

அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 35 மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Best-selling Cars In August 2025), மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் 8வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் 7 இடங்களில் முறையே மாருதி சுஸுகி எர்டிகா, மாருதி சுஸுகி டிசையர், ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸுகி வேகன் ஆர், டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் மாருதி சுஸுகி பலேனோ ஆகிய கார்கள் உள்ளன.

Maruti Suzuki Fronx Airbags

இந்த வரிசையில் 8வது இடம் பிடித்துள்ள மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை தற்போதைய நிலையில் 7.59 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் டாப் வேரியண்ட்டின் விலை தற்போதைய நிலையில் 13.11 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இவை அனைத்தும் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆனால் ஜிஎஸ்டி (GST) வரிகள் குறைக்கப்பட்டுள்ளதால், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் விலை, வரும் செப்டம்பர் 22ம் தேதிக்கு பிறகு குறையவுள்ளது.

அனேகமாக மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் புதிய விலை வெறும் 6.95 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் புதிய விலை வெறும் 11.85 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம்.

இது தோராயமான புதிய விலைகள் மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஃப்ராக்ன்ஸ் காரின் வேரியண்ட் வாரியான துல்லியமான புதிய விலைகள் எவ்வளவு? என்ற தகவலை தெரிந்து கொள்வதற்கு உங்களுக்கு அருகில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்பை அணுகுவது சிறந்தது.

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ், ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைக்க கூடிய சற்றே பிரீமியமான கார் ஆகும். எனவே மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா ஷோரூம்கள் மூலமாக ஃப்ரான்க்ஸ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், க்ரூஸ் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள், 22.86 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, சுஸுகி கனெக்ட் மற்றும் 360 வியூ கேமரா என எராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன.

அத்துடன் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், ஏபிஎஸ் மற்றும் இபிடி என ஏராளமான வசதிகளும், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் கொடுக்கப்படுகின்றன. அத்துடன் இதன் சிஎன்ஜி வேரியண்ட்கள் அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 28.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மைலேஜ் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet), நிஸான் மேக்னைட் (Nissan Magnite) ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) ஆகிய கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 13, 2025, 21:36 [IST]
English summary
Maruti suzuki fronx sales report august 2025 12422 units sold
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+