இப்படியே போனா வீட்டுக்கு வீடு இந்த கார் நிக்குமாட்ட இருக்கு! 29 கிமீ மைலேஜ்! ஆனா விலை இவ்ளோதானா!
இந்திய வாடிக்கையாளர்கள் மனதில் மிக குறுகிய காலத்தில் வலிமையான இடத்தை பிடித்த கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx). இந்திய சந்தையில் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில்தான், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் விற்பனைக்கே அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் வெறும் 17.30 மாதங்களிலேயே, அதாவது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் தொடக்கத்திலேயே, 2 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை (Sales Milestone) மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கடந்து விட்டது.
இதன் மூலம் இந்திய சந்தையில் வெகு விரைவாக 2 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை கடந்த கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் சொந்தமாக்கியது. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் எவ்வளவு பெரிய வரவேற்பை வழங்கி கொண்டுள்ளனர் என்பதற்கு இது ஒரு சான்று மட்டுமே.

இந்திய சந்தையில் மிக வேகமாக 2 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற சாதனையை படைத்த கார் என்ற பெருமையுடன், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் நிற்பதாக இல்லை. விற்பனையில் இன்னும் பல்வேறு சாதனைகளை படைக்கும் வகையில், தொடர்ந்து மிக வேகமாக முன்னேறி கொண்டுள்ளது.
இதன்படி நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதமும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் விற்பனையில் அசத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த விஷயம் நமக்கு தெரியவந்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 15,192 ஃப்ரான்க்ஸ் கார்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 13,643 ஃப்ரான்க்ஸ் கார்களை மட்டுமே மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது. இது 11 சதவீத வளர்ச்சி ஆகும். மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரை வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்புவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில், மைலேஜ் (Mileage) மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.
இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 28.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. அத்துடன் வசதிகளிலும் (Features) இந்த கார் அசத்துகிறது. 6 ஏர்பேக்குகள், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், லெதர் சுற்றப்பட்ட ஸ்டியரிங் வீல், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, கனெக்டட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் 360 டிகிரி கேமரா போன்றவை இந்த காரின் மிக முக்கியமான வசதிகள்.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் வாய்ந்த மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஆரம்ப விலை 7.52 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 12.88 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), டாடா நெக்ஸான் (Tata Nexon), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) மற்றும் ஸ்கோடா கைலக் (Skoda Kylaq) ஆகிய கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








