டாடாவுக்கு டஃப் குடுக்கும் 29 கிமீ மைலேஜ் கார்! விலை இவ்ளோதானா! அதனாலதான் சகட்டு மேனிக்கு விக்குது!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எஸ்யூவி (SUV) ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx). இதன் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் விற்பனையில் 18 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
காடிவாடி தளம் தற்போது வெளியிட்டுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் 12,872 மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 10,925 ஆக மட்டுமே இருந்தது.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம், 1,947 மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் விற்பனையில் 18 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
அத்துடன் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 எஸ்யூவி ரக கார்களின் பட்டியலில் (Top 10 SUVs July 2025), மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் 4வது இடத்தை பிடித்துள்ளது. முதல் 3 இடங்களில் முறையே ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ ஆகிய கார்கள் உள்ளன.

இந்த வரிசையில் 4வது இடத்தில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் உள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 7.59 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட 13.11 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.
இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இருப்பினும் 360 டிகிரி வியூ கேமரா, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஸ்மார்ட்ப்ளே ப்ரோ ப்ளஸ் டச்ஸ்கீரின் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் என மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் ஏராளமான வசதிகள் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் க்ரூஸ் கண்ட்ரோல், 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், ஏபிஎஸ், இபிடி மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் உள்ளிட்ட வசதிகளையும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் கொண்டுள்ளது. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு ஆகும்.
மேலும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் வழங்கப்படும் இன்ஜின் ஆப்ஷன்களிலேயே அதிகபட்சமாக அதன் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 28.51 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாக உள்ளது. சரியான விலை நிர்ணயம், அதிநவீன வசதிகள் மற்றும் அட்டகாசமான மைலேஜ் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்துதான், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரை மிகவும் வெற்றிகரமான தயாரிப்புகளில் ஒன்றாக மாற்றியுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet) மற்றும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) ஆகிய கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








