29 கிமீ மைலேஜ் தர்ற காரை தரமட்ட ரேட்டில் வித்து தள்ளும் மாருதி! டாடாவ ஒழிச்சு கட்டாம விடமாட்டாங்கலாட்ட இருக்கு
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx). இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார், விற்பனையில் 1 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதாவது மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 9,688 ஃப்ரான்க்ஸ் கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கையானது, நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 9,815 என சற்றே உயர்ந்துள்ளது. இது 1 சதவீத வளர்ச்சி ஆகும்.

இதன் மூலம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars Sold In June 2025), மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் 10வது மற்றும் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இது இந்திய சந்தையில் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார் ஆகும்.
ஆனால் அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 17 மாதங்களிலேயே, அதாவது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே, 2 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மிகவும் பிரம்மாண்டமான விற்பனை மைல்கல்லை மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கடந்து விட்டது. இதற்கு மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் மைலேஜ் (Mileage), வசதிகள் (Features) மற்றும் விலை (Price) ஆகியவைதான் மிகவும் முக்கியமான காரணங்களாக கருதப்படுகின்றன.

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் வேரியண்ட்களிலேயே அதிகபட்ச மைலேஜ் வழங்குவது சிஎன்ஜி வேரியண்ட்கள் ஆகும். அவற்றின் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 28.51 கிலோ மீட்டர் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் ஏராளமான வசதிகளும் வாரி வழங்கப்பட்டுள்ளன.
இதில், க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்மார்ட்ப்ளே ப்ரோ ப்ளஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி வியூ கேமரா, 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அஸிஸ்ட் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் கனெக்டிவிட்டி போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
ஆனால் வேரியண்ட்களை பொறுத்து வசதிகள் மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 7.54 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 12.91 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) ஆகிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.


Click it and Unblock the Notifications








