29 கிமீ மைலேஜ் தரும் காருக்கு மார்க்கெட்ல எகிறிய டிமாண்ட்! டாடாவுக்கு இந்நேரம் குளிர் காய்ச்சலே வந்திருக்கும்!
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களுக்கு (Maruti Suzuki Cars) வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) காரை வாடிக்கையாளர்கள் நிறைய பேர் வாங்கி கொண்டுள்ளனர். இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் அதன் விற்பனை எண்ணிக்கை சிறப்பாக உள்ளது.
இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதமும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் 13,584 மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு மே மாதம், 12,681 ஆக மட்டுமே இருந்தது. இது 7 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த வளர்ச்சியின் மூலம் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars May 2025) மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் 8வது இடத்தை பிடித்துள்ளது.
முதல் 7 இடங்களில் முறையே மாருதி சுஸுகி டிசையர், மாருதி சுஸுகி எர்டிகா, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் க்ரெட்டா, மஹிந்திரா ஸ்கார்பியோ, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் மாருதி சுஸுகி வேகன் ஆர் ஆகிய கார்கள் உள்ளன. இந்த வரிசையில் 8வது இடத்தில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் உள்ளது.

9வது இடத்தில் டாடா பன்ச் காரும், 10வது மற்றும் கடைசி இடத்தில் டாடா நெக்ஸான் காரும் இருக்கின்றன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஆரம்ப விலை 7.55 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 12.91 லட்ச ரூபாயாக உள்ளது.
இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் 1.2 லிட்டர் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 21.79 கிலோ மீட்டர் மைலேஜை வழங்குகின்றன. அதே நேரத்தில் இதன் 1.2 லிட்டர் பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 22.89 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகின்றன.
மறுபக்கம் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 21.50 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகின்றன. மறுபக்கம் இந்த காருடைய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 21.50 கிலோ மீட்டர் மைலேஜையும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.01 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்குகின்றன.
ஆனால் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் இவை அனைத்தையும் விட அதிக மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. மாருதி சுஸுகி ப்ரான்க்ஸ் காரின் சிஎன்ஜி வேரியண்ட்களின் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 28.51 கிலோ மீட்டராக உள்ளது. இவை மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மைலேஜ் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) மற்றும் கியா சொனெட் (Kia Sonet) போன்ற கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








