29 கிமீ மைலேஜ்! ஆனா இவ்ளோ கம்மி ரேட்ல விக்கறாங்களா! இந்த கார்ல போனா ஊரே உங்களைதான் திரும்பி பாக்கும்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx). க்ராஸ்ஓவர் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், 15,058 மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் வெறும் 14,882 மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 176 மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் விற்பனையில் 1 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அத்துடன் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars November 2025), மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் 8வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் 7 இடங்களில் முறையே டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி டிசையர், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், டாடா பன்ச், ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ ஆகிய கார்கள் உள்ளன. இந்த வரிசையில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் 8வது இடத்தை பிடித்துள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.85 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 11.98 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
இது ஓரளவிற்கு விலை குறைவானது என்பதுடன், சிறப்பான மைலேஜ் வழங்க கூடிய கார்களில் ஒன்றாகவும் இருக்கிறது. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 28.51 கிலோ மீட்டர் மைலேஜ் தருவதாக மாருதி சுஸுகி நிறுவனம் கூறுகிறது. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும்.
பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் போன்றவை எல்லாம், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா நெக்ஸான் (Tata Nexon), கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) போன்ற சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








