இதை மாருதி கார்னு சொன்னா மாருதியே நம்பாது! சொகுசு கார் மாதிரி இருக்கு! ஆனா ரேட் கம்மிதான்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno). இந்த காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கூபே க்ராஸ்ஓவர் (Coupe Crossover) கார்தான், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx).
மாருதி சுஸுகி பலேனோவை போலவே, மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரும், இந்திய சந்தையில் மிகவும் பிரம்மாண்டமான வெற்றியை சந்தித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் பதிவு செய்து வருகிறது.

இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதமும், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் விற்பனை சிறப்பாக இருந்துள்ளது. காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ள மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது.
இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மாருதி சுஸுகி நிறுவனம் 13,767 ஃப்ரான்க்ஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 13,874 ஆக இருந்தது. அதாவது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 107 மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது 1 சதவீத வீழ்ச்சி ஆகும். இது மிகவும் சிறிய அளவிலான வீழ்ச்சி மட்டுமே என்பதால், கூடிய விரைவிலேயே மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1 சதவீத வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும், நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars September 2025), மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் 8வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் 7 இடங்களில் முறையே டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி டிசையர், ஹூண்டாய் க்ரெட்டா, மஹிந்திரா ஸ்கார்பியோ, டாடா பன்ச், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் மாருதி சுஸுகி வேகன் ஆர் ஆகிய கார்கள் உள்ளன. இந்த வரிசையில் 8வது இடம் பிடித்துள்ள மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் அதிநவீன வசதிகள் நிரம்பியது ஆகும்.
இந்த காரின் வசதிகளை (Features) பொறுத்தவரையில், 22.86 செமீ ஸ்மார்ட்ப்ளே ப்ரோ ப்ளஸ் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 360 வியூ கேமரா, 40க்கும் மேற்பட்ட கனெக்டட் கார் வசதிகளுடன் கூடிய சுஸுகி கனெக்ட், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் பின் பகுதியில் ஃபாஸ்ட் சார்ஜர் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், ஹில் ஹோல்டு அஸிஸ்ட் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். அத்துடன் ஹார்டெக்ட் பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.
இப்படி ஏகப்பட்ட வசதிகளை கொண்டுள்ள மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 28.51 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக உள்ளன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஆரம்ப விலை 6.85 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 11.98 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ, ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், ஸ்கோடா கைலக், ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் போன்ற சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் திகழ்கிறது.


Click it and Unblock the Notifications








