இது காரா? இல்ல பைக்கா? இவ்ளோ மைலேஜ் தருது! அதான் லட்சக்கணக்கான மக்கள் கண்ண மூடிட்டு வாங்கீட்டு இருக்காங்க!

இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara). கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

அதாவது இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 32 மாதங்கள் மட்டுமே ஆகின்றன. ஆனால் அதற்குள்ளாக 3 லட்சம் யூனிட்கள் என்ற பிரம்மாண்டமான விற்பனை மைல்கல்லை (Sales Milestone) மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா தற்போது கடந்துள்ளது. வெறும் 32 மாதங்களில் 3 லட்சம் க்ராண்ட் விட்டாரா கார்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதால், மாருதி சுஸுகி மகிழ்ச்சியடைந்துள்ளது.

Maruti Suzuki Grand Vitara Side Design

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் இந்திய சந்தையில் மிக பிரம்மாண்டமான வெற்றியை சந்தித்திருப்பதை இந்த விற்பனை மைல்கல் தெளிவாக எடுத்து காட்டுகிறது. இதற்கு மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் விலை (Price), வசதிகள் (Features) மற்றும் மைலேஜ் (Mileage) ஆகியவைதான் மிகவும் முக்கியமான காரணங்களாக கருதப்படுகின்றன.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் 11.42 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 20.52 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

Maruti Suzuki Grand Vitara

இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருப்பதால்தான், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் விற்பனையில் மிக பிரம்மாண்டமான வெற்றியை சந்தித்துள்ளது. இந்த காரின் வசதிகளை பொறுத்தவரையில், 9 இன்ச் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ ப்ளஸ் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் முக்கியமான ஒன்றாக உள்ளது.

அத்துடன் முன் பகுதியில் வென்டிலேஷன் உடன் கூடிய இருக்கைகள், பிஎம் 2.5 டிஸ்ப்ளே உடன் ஆட்டோ ஏர் ப்யூரிஃபையர், சுஸுகி கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற வசதிகளும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில், ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் ஹில் ஹோல்டு அஸிஸ்ட் போன்ற வசதிகள் எல்லாம் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில் வழங்கப்பட்டுள்ளன.

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மிட்-சைஸ் எஸ்யூவி காரின் செயல்திறனை பொறுத்தவரையில், மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் ஆகியவை ஆகும்.

இதில், அதிகபட்சமாக மைலேஜ் வழங்குவது ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின்தான். அதன் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 27.97 கிலோ மீட்டர் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே அதிக மைலேஜ் எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற காராகவும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா திகழ்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) ஆகிய கார்களுக்கு எல்லாம் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன்.

More from DriveSpark

Article Published On: Friday, June 6, 2025, 18:55 [IST]
English summary
Maruti suzuki grand vitara 3 lakh sales milestone check all details here
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+