இப்பதான் வெளிய தெரிஞ்சிருக்கு! மாருதி சுஸுகி தயாரிச்ச 40 ஆயிரம் கார்களில் பிரச்சனை! உரிமையாளர்கள் அதிர்ச்சி!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara). மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த க்ராண்ட் விட்டாரா காருக்கு, மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது ரீகால் (Recall) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரீகால் என்பது, விற்பனை செய்யப்பட்ட கார்களில் ஏதேனும் பிரச்னை இருப்பது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட கார் நிறுவனத்தால் வெளியிடப்படும் ஒரு அறிவிப்பு ஆகும். வாடிக்கையாளர்களிடம் இருந்து காரை திரும்ப பெறும் கார் தயாரிப்பு நிறுவனம் டீலர்ஷிப்கள் மூலமாக, அந்த பிரச்னையை சரி செய்த பின்னர், வாடிக்கையாளர்களிடமே திரும்ப வழங்கும்.

Maruti Suzuki Grand Vitara Side Design

சம்பந்தப்பட்ட பிரச்னை முற்றிலும் இலவசமாக சரி செய்து தரப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த சூழலில், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் ஸ்பீடோமீட்டர் அசெம்ப்ளியில் உள்ள எரிபொருள் அளவை காட்டும் இன்டிகேட்டர் மற்றும் எச்சரிக்கை விளக்குகளில் பிரச்னை இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

அவை மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் உரிமையாளர்களுக்கு துல்லியமான தகவல்களை வழங்குவதில்லை. எனவே அவற்றை சரி செய்து வழங்குவதற்காக மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது ரீகால் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதியில் இருந்து 2025ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்ட 39,506 மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார்களில் பிரச்னை இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Maruti Suzuki Grand Vitara

தற்போது சம்பந்தப்பட்ட க்ராண்ட் விட்டாரா கார்களின் உரிமையாளர்களை மாருதி சுஸுகி நிறுவனம் தொடர்பு கொண்டு வருகிறது. அத்துடன் தங்களது டீலர்ஷிப்கள் மூலமாக அவர்களுக்கு பிரச்னையை முற்றிலும் இலவசமாக சரி செய்து தரும் பணியிலும், மாருதி சுஸுகி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இது குறித்து தி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா, மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 10.77 லட்ச ரூபாயாக உள்ளது. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), ஹோண்டா எலவேட் (Honda Elevate) மற்றும் எம்ஜி அஸ்டர் (MG Astor) போன்ற கார்களுடன், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா போட்டியிட்டு வருகிறது.

அத்துடன் கியா செல்டோஸ் (Kia Seltos), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) போன்ற கார்களுக்கும் கூட, மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன்தான். மேலும் கூடிய விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய தலைமுறை டாடா சியரா (Tata Sierra) உடனும், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டரா போட்டியிடும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் அதிகம் விற்பனையாகி வரும் மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா திகழ்கிறது. இந்த காருக்கு வெளியிடப்பட்டுள்ள ரீகால் அறிவிப்பு வழக்கமான ஒன்றுதான். உங்கள் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில் பிரச்னை இருந்தால், மாருதி சுஸுகி நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்பை அணுகலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, November 17, 2025, 14:02 [IST]
English summary
Maruti suzuki grand vitara recall all you need to know
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+