கதையில பயங்கர ட்விஸ்ட்! அவ்ளோதான் முடிஞ்சுதுனு நெனச்ச மாருதி கார் 'கம்பேக்' கொடுத்து மாஸ் காட்டீருச்சு!
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அரேனா (Arena) மற்றும் நெக்ஸா (Nexa) ஆகிய ஷோரூம்கள் மூலமாக கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், நெக்ஸா மூலம் விற்பனை செய்யப்படுபவை பிரீமியம் கார்களாக கருதப்படுகின்றன. அப்படி நெக்ஸா ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்படும் ஒரு கார்தான் மாருதி சுஸுகி இக்னிஸ் (Maruti Suzuki Ignis). மாருதி சுஸுகி இக்னிஸ் காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால், மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 3,780 இக்னிஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 2,598 ஆக மட்டுமே இருந்தது. இது 45 சதவீத வளர்ச்சி ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி இக்னிஸ் காரின் ஆரம்ப விலை 5.85 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 8.12 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
செயல்திறனை பொறுத்த வரையில் மாருதி சுஸுகி இக்னிஸ் காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக 83 பிஎஸ் பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. வசதிகளை (Features) பொறுத்த வரையில், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கீலெஸ் எண்ட்ரி மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் ஆகிய வசதிகள் எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய வகையிலான டிரைவர் இருக்கை மற்றும் ஆட்டோமேட்டிக் ஏசி ஆகிய வசதிகளும் மாருதி சுஸுகி இக்னிஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மாருதி சுஸுகி இக்னிஸ் காரில் ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் (Safety Features) கொடுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பை பொறுத்த வரையில், ரியர் பார்க்கிங் கேமரா, ரியர் பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ், ஏர்பேக்குகள் போன்றவை எல்லாம் மாருதி சுஸுகி இக்னிஸ் காரின் மிக முக்கியமான வசதிகள் ஆகும். இது போன்ற காரணங்களால் இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இது எஸ்யூவி கார்களை போன்ற தோற்றம் கொண்ட ஒரு காம்பேக்ட் கார் ஆகும். முதல் முறையாக ஒரு புதிய காரை வாங்கலாம் என முடிவு செய்துள்ள நடுத்தர வர்க்க மக்களுக்கு மாருதி சுஸுகி இக்னிஸ் ஏற்றதாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.
மாருதி சுஸுகி இக்னிஸ் கார் ஒவ்வொரு மாதமும் சுமார் 2,500 என்ற எண்ணிக்கையில் மட்டுமே விற்பனையாகி கொண்டுள்ளது. எனவே இதை பலரும் தோல்வியடைந்த காராக கருதுகின்றனர். விற்பனை மந்தமாக இருப்பதால், மாருதி சுஸுகி இக்னிஸ் காரின் சேல்ஸ் நிறுத்தப்படலாம் என்றெல்லாம் கூட யூகங்கள் கிளம்பின.
ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் மாருதி சுஸுகி இக்னிஸ் கார் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து 'கம்பேக்' கொடுத்துள்ளது. அத்துடன் சிறப்பான வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. ஆனால் இந்த வளர்ச்சி தொடருமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








