சும்மா குடுத்தா கூட வாங்க மாட்டாங்கலாட்ட இருக்கு... மாருதி சுஸுகி நிறுவனத்தின் காருக்கே இப்படி ஒரு நிலைமையா!

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பல்வேறு கார்கள் ஒவ்வொரு மாதமும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன. மறுபக்கம் ஒரு சில கார்கள் விற்பனையில் தடுமாறி கொண்டும் உள்ளன. அப்படி சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்ய தடுமாறி கொண்டுள்ள மாருதி சுஸுகி கார்களில் ஒன்றாக இக்னிஸ் (Maruti Suzuki Ignis). மாருதி சுஸுகி இக்னிஸ் காரின் விற்பனை எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் மிகவும் சுமாராகதான் உள்ளது. இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதமும் மாருதி சுஸுகி இக்னிஸ் கார் விற்பனையில் சோபிக்க தவறியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இது தெரிய வந்துள்ளது. இதன்படி பார்த்தால் மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய சந்தையில் வெறும் 1,900 இக்னிஸ் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 2,788 ஆக இருந்தது.

Maruti Ignis Side Design

இது 32 சதவீத வீழ்ச்சி ஆகும். இக்னிஸ் காரானது, மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா (Nexa) ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி இக்னிஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் (சிக்மா) விலை 5.85 லட்ச ரூபாயாக உள்ளது.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் (ஆல்ஃபா ஏஜிஎஸ்) விலை 8.12 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மாருதி சுஸுகி இக்னிஸ் கார் மொத்தம் 10 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில், 7 கலர் ஆப்ஷன்கள் சிங்கிள் டோன் ஆகும். எஞ்சிய 3 கலர் ஆப்ஷன்களும் ட்யூயல் டோன் ஆகும்.

Maruti Ignis

சிங்கிள் டோன் கலர் ஆப்ஷன்கள் பின்வருமாறு: நெக்ஸா ப்ளூ, ல்யூசென்ட் ஆரஞ்ச், சில்கி சில்வர், டார்க்காய்ஸ் ப்ளூ, க்ளிஸ்டரிங் க்ரே, பியர்ல் ஆர்டிக் ஒயிட் மற்றும் பியர்ல் மிட்நைட் பிளாக் ஆகியவை ஆகும். ட்யூயல் டோன் கலர் ஆப்ஷன்கள் பின்வருமாறு: கருப்பு மேற்கூரை உடன் ல்யூசென்ட் ஆரஞ்ச், சில்வர் மேற்கூரை உடன் நெக்ஸா ப்ளூ மற்றும் கருப்பு மேற்கூரை உடன் நெக்ஸா ப்ளூ ஆகியவை ஆகும்.

மாருதி சுஸுகி இக்னிஸ் காரில் 1.2 லிட்டர் விவிடி பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 61 kW பவரையும், 4,200 ஆர்பிஎம்மில் 113 Nm டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

இந்திய சந்தையில் டாடா டியாகோ (Tata Tiago) மற்றும் டாடா பன்ச் (Tata Punch) போன்ற கார்களுடன், மாருதி சுஸுகி இக்னிஸ் போட்டியிட்டு வருகிறது. மாருதி சுஸுகி இக்னிஸ் காரில், 17.78 செமீ டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன.

இவை எல்லாம் தவிர டில்ட் வசதியுடன் கூடிய ஸ்டியரிங் வீல், ஆட்டோ ஓஆர்விஎம், 60:40 ஸ்பிளிட் இருக்கைகள், எல்இடி பகல் நேர விளக்குகள் மற்றும் எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் போன்ற வசதிகளும் மாருதி சுஸுகி இக்னிஸ் காரில் வழங்கப்படுகின்றன. இருப்பினும் வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற தவறியதால், மாருதி சுஸுகி இக்னிஸ் விற்பனையில் தடுமாறி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் விற்பனையில் தடுமாறி கொண்டுள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களில் ஒன்றாக இக்னிஸ் உள்ளது. எனவே மாருதி சுஸுகி நிறுவனம் இக்னிஸ் காரின் விற்பனையை அதிகரிக்க தேவையான சரியான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். இது நடந்தால் மட்டுமே, மாருதி சுஸுகி இக்னிஸ் காரின் விற்பனை எண்ணிக்கையை உயர்த்த முடியும்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 19, 2025, 23:28 [IST]
English summary
Maruti suzuki ignis sales report march 2025 32 per cent down
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+