இந்தியருக்கு கிடைத்த கெளரவம்! முதல் முறையாக மாருதியின் தலைமை பொறுப்பில் ஒரு இந்தியர்! யார் இவர் தெரியுமா?
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸூகி நிறுவனம் தனது போர்டில் முழு நேர இயக்குநராக வரலாற்றில் முதன் முறையாக ஒரு இந்திய ஊழியரை நியமித்துள்ளது. மாருதி சுஸூகிக்கு 35 ஆண்டுகளாக தனது சேவையை அர்ப்பணித்து வரும் சுனில் கக்கர், இந்த முக்கியமான பொறுப்பை ஏற்றுள்ளார், இது நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்
மாருதி சுஸூகியில் பிரபலமான நபரான சுனில் கக்கர், கூட்டு நிறுவனத் திட்டமிடலை கவனித்துக்கொள்ளும் மூத்த நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இயக்குநராக அவர் 2025 ஏப்ரல் 1 முதல் 2028 மார்ச் 31 வரை பணியாற்றுவார். சுஸூகி மோட்டார் கார்ப்பரேஷன் (எஸ்எம்சி) மாரூதி சுஸூகி போர்டில் இந்தியாவின் உள்நாட்டு ஊழியரை நியமிப்பது இது முதல் முறையாகும். இது அந்நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாடுகளில் இந்திய தலைமையின் வளர்ந்து வரும் செல்வாக்கையும் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

மாஸதி சுஸூகியின் போர்டில் இப்போது இந்தியாவிலிருந்தும் ஜப்பானிலிருந்தும் சமமான எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் 6 பிரதிநிதிகள் இருப்பார்கள். இந்த சமநிலை பிரதிநிதித்துவம், அந்நிறுவனத்தின் நிர்வாக முடிவெடுக்கும் பணியில் இந்தியாவின் அதிகரித்த பங்கை பெற்றுள்ளது, இது உள்ளூர் நிபுணத்துவத்தையும் நுண்ணறிவையும் பயன்படுத்தும் ஒரு முக்கிய மாற்றத்தைக் குறிக்கிறது. சுனில் கக்கரை முழுநேர இயக்குநராக நியமித்தது, இந்திய பணியாளர்களின் பங்களிப்பை ஊக்குவித்து அங்கீகரிக்க அந்நிறுவனம் உறுதிபூண்டுள்ளதற்கு இது சான்றாகும்.
மாருதி சுஸூகியில் பணியாற்றிய காலத்தில், சுனில் கக்கர், குர்கிராம் வாகன தயாரிப்பு ஆலையில் சப்ளை செயின் மேனேஜ்மென் மற்றும் செயல்பாடுகளை வழிநடத்தி, முக்கியமான துறைகளை வழிநடத்தினார். அவரது முயற்சிகள் உள்ளூர் உற்பத்தி திறன்களை பெரிதும் அதிகரித்து முக்கிய கூட்டு முயற்சிகளை நிறுவுவதற்கு வழிவகுத்தன.

மேலும், கக்கர், ஜப்பான், இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச கூட்டாளர்களுடன் இணைந்து ஏஎம்டி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, அதிக டென்ஷன் கொண்ட உலோகம் ஷீட்கள் தயாரிப்பு மற்றும் புதுமையான பிளாஸ்டிக் பெட்ரோல் டேங்க் வடிவமைப்பு உள்ளிட்ட முன்னோடி திட்டங்களில் பணியாற்றியுள்ளார்.
மாருதி சுஸூகியில் உள்ள பதவிகளுக்கு கூடுதலாக, சுனில் கக்கர், மார்க் எக்ஸாஸ்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட், எஸ்கேஹெச் மெட்டல்ஸ் லிமிடெட் மற்றும் ஹான்னான் கிளைமேட் சிஸ்டம்ஸ் இந்தியா ப்ரைவேட் லிமிடெட் உள்ளிட்ட பல நிறுவனங்களின் போர்டுகளின் இயக்குநர் பதவிகளை வகிக்கிறார். அவரது கல்விப் பின்னணியும் சிறப்பாக இருக்கிறது. அவர் ஐஐடி கான்பூரில் இருந்து பொறியியல் பட்டம் பெற்றவர். மேலும் ஆசிய தொழிற்நுட்ப நிறுவனத்தில் இருந்து எம்பிஏ பட்டம் பெற்றார். அங்கு அவர் தங்கப் பதக்கம் பெற்றார்.

மற்றொரு முக்கிய நடவடிக்கையில், மாருதி சுசுகி, டிஜிட்டல் மற்றும் சைபர் பாதுகாப்பு துறையின் தலைவராக தபன் சாஹூவை நியமித்துள்ளது. இது நிறுவனத்தின் டிஜிட்டல் முயற்சிகளை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை காட்டுகிறது. இந்த முடிவு, மாருதி சுசுகி தனது தரவரிசையில் இந்திய தலைமையை அதிகாரப்படுத்துவதற்கான முயற்சிகளைக் காட்டுகிறது. அந்நிறுவனத்தின் எதிர்கால திசையை வடிவமைப்பதில் அவர்களின் முக்கிய பங்கை அங்கீகரிக்கிறது.
சுனில் கக்கரை முழுநேர இயக்குநராக நியமித்தது, இந்திய நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்புகளை ஒப்படைத்தது. மாருதி சுசுகியின் திட்டம் மற்றும் செயல்பாட்டு வெற்றியில் இந்தியர் திறமை வகிக்கும் முக்கிய பங்கை அந்நிறுவனம் அங்கீகரிப்பதை எடுத்துக்காட்டுகிறது. முடிவெடுக்கும் மிக உயர்ந்தபொறுப்புகளில் இந்திய நிபுணத்துவத்தை ஏற்றுக்கொண்டு ஒருங்கிணைப்பதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும். அந்நிறுவனத்திற்குள் மற்றும் பெரிய அளவில் தொழில்துறையில் எதிர்கால தலைமை நியமனங்களுக்கு ஒரு முன்னுதாரணத்தை அமைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுசுஸூயின் போர்டில் சுனில் கக்கரை முழுநேர இயக்குநராக சேர்க்கும் முடிவு, இந்திய திறமையை அங்கீகரித்துப் பயன்படுத்துவதற்கான அந்நிறுவனத்தின் மாறும் அணுகுமுறையின் தெளிவான அறிகுறியாகும். இந்த நடவடிக்கை, கக்கரின் 35 ஆண்டுகால அர்ப்பணிப்பு மற்றும் அந்நிறுவனத்திற்கான பங்களிப்பை மட்டும் கௌரவிக்கவில்லை, ஆனால் இந்திய ஆட்டோமொபைல் துறையில் தலைமைக்கு ஒரு புதிய தரத்தை எடுத்துகாட்டியுள்ளது. இந்திய நிபுணத்துவம் மற்றும் தலைமை சர்வதேச நிறுவன திட்டம் மற்றும் புதுமைக்கு ஒருங்கிணைந்ததாக இருக்கும் எதிர்காலத்திற்கு உறுதியளிக்கிறது.


Click it and Unblock the Notifications









