இன்னும் 4 நாள் தான்! ஏப்1 முதல் இந்த கார்களின் விலை தாறுமாறா ஏறப்போகுது! எவ்வளவுன்னு தெரியுமா?
மாருதி சுஸுகி இந்தியாவில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மீண்டும் கார் விலைகளை உயர்த்த உள்ளது. இது இந்த ஆண்டின் மூன்றாவது உயர்வு ஆகும். ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 2 முறை விலைகளை உயர்த்தியது. இந்த முறை விலை உயர்வு 4% வரை இருக்கும் என தெரிவித்திருந்தது. இந்த விலை உயர்வு அனைத்து மாடல் கார்களிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது., இது அரீனா மற்றும் நெக்ஸா டீலர்ஷிப்களில் கார்களின் எக்ஸ் ஷோரூம் விலையில் பிரதிபலிக்கும். இந்த விலை உயர்வில் எந்தெந்த கார்கள் எவ்வளவு விலை அதிகமாக இருக்கும் என்ற விபத்தை இங்கே காணலாம் வாருங்கள்.
ஆல்டோ K10 இன் தற்போதைய எக்ஸ்-ஷோரூம் விலை ₹4.23 லட்சம் முதல் ₹6.21 லட்சம் வரை இருக்கிறது. இந்த கார் 4% விலை உயர்வுடன், ₹16,920 முதல் ₹24,840 வரை உயரலாம், இதன் விளைவாக புதிய உயர்த்தப்பட்ட விலைகள் ₹439,920 முதல் ₹645,840 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், எஸ்-பிரெஸ்ஸோவின் விலை ரேஞ்ச் ₹4.27 லட்சம் முதல் ₹6.12 லட்சம் வரை இருக்கிறது. இந்த கார் ₹17,080 முதல் ₹24,480 வரை அதிகரிக்கலாம்,

செலெரியோவின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்போது ₹5.37 லட்சம் முதல் ₹7.10 லட்சம் வரை இருக்கிறது. 4% உயர்வு என்பது ₹21,480 முதல் ₹28,400 வரை கூடுதல் விலை உயர்வு ஏற்படலாம், இதனால் புதிய விலை ரேஞ்ச் சுமார் ₹558,480 முதல் ₹738,400 வரை இருக்கும். அதே நேரத்தில், ஈக்கோவின் விலைகள் தற்போதைய ரேஞ்சான ₹5.44 லட்சம் முதல் ₹6.91 லட்சம் வரை சுமார் ₹21,760 முதல் ₹27,640 வரை உயரக்கூடும்.
வேகன்ஆர் காரின் தற்போதைய விலை ரேஞ்ச் ₹5.65 லட்சம் முதல் ₹7.48 லட்சம் வரை இருக்கிறது. 4% உயர்வுடன், வாடிக்கையாளர்கள் கூடுதலாக ₹22,600 முதல் ₹29,920 வரை செலுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதன் விளைவாக, புதிய விலைகள் ₹587,600 முதல் ₹777,920 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்னீஸ் கார் தற்போது எக்ஸ்-ஷோரூம் ₹5.85 லட்சம் முதல் ₹ 8.12 லட்சம் வரை விலையில் விற்பனையாகி வருகிறது. 4% உயர்வு அதன் விலையை சுமார் ₹23,400 முதல் ₹32,480 வரை கூடுதலாகச் சேர்க்கும். எனவே, இந்த கார் ஏப் 1ம் தேதிக்கு பிறகு சுமார் ₹608,400 முதல் ₹844,480 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலேனோ காரின் தற்போதைய விலை ரேஞ்ச் ₹ 6.70 லட்சம் முதல் சுமார் ₹ 9.92 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகிறது; இதேபோன்ற 4 சதவீத உயர்வு என்பது சுமார் ₹26,800 முதல் ₹39,680 வரை கூடுதல் விலையை செலுத்த வேண்டும். இந்த விலை உயர்வுக்கு பிறகு இந்த கார் ₹ 696,800 முதல் ₹ 10,31,680 வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம்

ஃபிராங்க்ஸ் மாடல் தற்போது சுமார் ₹ 7.52 லட்சம் முதல் ₹12.88 லட்சம் வரை விலை ரேஞ்சை கொண்டுள்ளது. உயர்வுக்குப் பிறகு சுமார் ₹30,080 முதல் ₹51,520 வரை விலை உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக விலை உயர்த்தப்பட்ட பிறகு சுமார் ₹ 782,080 முதல் ₹ 13,39,520 வரை இந்த கார் விற்பனையாக வாய்ப்புகள் உள்ளன
சியாஸ் கார் தற்போது சுமார் ₹ 9.42 லட்சம் முதல் ₹ 12.31 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் விலை உயர்வில் தொடர்ந்து சுமார் ₹37 ஆயிரம் முதல் ₹49 ஆயிரம் வரை இருக்கும் என எதிர்பார்க்கலாம், வாடிக்கையாளர்கள் இந்த காரை Rs 9.79 லட்சம் முதல் ₹12.80 லட்சம் வரை உயரும் என எதிர்பார்க்கலாம்

கிராண்ட் விட்டாரா காரின் தற்போதைய விலை ₹ 11லட்சம் முதல் ₹19L லட்சம் வரை வரை விற்பனையாகி வருகிறது. விலை உயர்வுக்கு பிறகு 44 ஆயிரம் முதல் ₹79 ஆயிரம் வரை கூடுதல் கட்டணங்களை பெறும். எனவே புதிய விலையாக ₹11. 63k முதல் ₹20.78k லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கலாம்
XL6 ₹11 லட்சம் முதல் ₹14.71 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது. இந்த கார் விலை உயர்வில் ₹46ஆயிரம் முதல் ₹58 ஆயிரம் வரை கூடுதல் விலையில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த கார் ₹12. 17 லட்சம் முதல் ₹15.29 லட்சம் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிம்னி காரின் பேஸ் வேரியன்ட் விலை ₹12.76 லட்சம் முதல் ₹14.81 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது. எதிர்பார்க்கப்படும் விலை உயர்வில் ₹51 ஆயிரம் முதல் ₹59 ஆயிரம் வரை விலை உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு ச விலை உயர்வில் ₹13.27லட்சம் முதல் ₹15.40 லட்சம் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்விக்டோ காரை பொருத்தவரை ₹25.51 லட்சம் முதல் ₹29.22 லட்சம் வரை பிரீமியம் விலையில் விற்பனையாகிறது. தற்போது கொண்டு வரப்படும் விலை உயர்வு என்பது முறையே ₹1.02 லட்சம் முதல் ₹1.16 லட்சம் வரை உயரும் வாய்புள்ளது. இறுதியாக இந்த கார் ஏப்1ம் தேதி முதல் ₹26.53K லட்சம் ₹30.38K லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது.
இந்த விலை உயர்வு நேரடியாக அனைத்து கார்களிலும் இருப்பதால் ஏப்1ம் தேதிக்கு பிறகு கார் வாங்கும் என்னத்தில் இருப்பவர்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியது இருக்கும். இதனால் நீங்கள் அடுத்த 4 நாட்களில் புதிய காரை வாங்கினால் பழைய விலைக்கு வாங்க முடியும். அதன்பிறகு புதிய விலை தான் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அவ்வப்போது தங்கள் விலையை திருத்தம் செய்து உயர்த்துவார்கள். அப்படியான ஒரு விலை உயர்வாக தான் இந்த கார் பார்க்கப்படுகிறது. தற்போது விலை உயர்வு காரணமாக இந்த மார்ச் மாதம் விற்பனை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த விலைகள் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications









