மாருதியின் இந்த காருல திரும்பின பக்கமெல்லாம் பலூன் இருக்கும்! இது சதாராண பலூன் அல்ல, உயிரையே காக்கும்...
கார்களில் பயணிகளின் பாதுகாப்பிற்காக வழங்கப்படும் மிக முக்கியமான அம்சங்களில் 'ஏர் பேக்' (Airbag)-ம் ஒன்றாகும். இது விபத்தின்போது பலூன் போன்று விரிந்து உயிர்களைப் பாதுகாக்கும். நம்முடைய தலை மற்றும் மார்பகம் காரினுள் உள்ள பாகங்களின் மீது வேகமாக மோதுவதை தவிர்த்தே அவை உச்சபட்ச பாதுகாப்பை வழங்குகின்றன. இத்தகைய ஓர் அம்சத்தையே மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் விலை குறைவான கார் மாடல் ஒன்றில் அதிக எண்ணிக்கையில் வழங்க முன் வந்திருக்கின்றது.
ஆல்டோ கே10 (Alto K10) கார் மாடலிலேயே அது எண்ணிக்கையில் காற்று பலூன்களை வழங்கி உள்ளது. இது நிறுவனத்தின் விலை குறைவான கார் மாடல் மட்டுமல்ல அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாகவும் ஆல்டோ கே10 காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடலின் பக்கமே மக்களை கூடுதலாக வளைத்துப் போடும் நோக்கில் அதிக எண்ணிக்கையில் ஏர் பேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஆல்டோ கே10 கார் மாடலின் ஆரம்ப நிலை தேர்விலேயே ஆறு ஏர் பேக்குகள் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனால் ஆல்டோ கே10 கார் மாடலில் திரும்பிய பக்கமெல்லாம் காற்று பலூன்கள் இருக்கும் சூழல் தற்போது உருவாகி உள்ளது. இது ஆல்டோ கே10 கார் மாடலை வாங்குவோருக்கு கூடுதல் நம்பிக்கையை தரும் வகையில் அமைந்திருக்கின்றது.
ஏர் பேக்குகள் மட்டுமல்ல மும்முனை சீட் பெல்ட் அம்சமும் இந்த காரில் பயணியின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டு இருக்கின்றது. இது நடு இருக்கையாளரின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டு இருக்கின்றது. மாருதி சுஸுகி நிறுவனம் ஆல்டோ கே10 கார் மாடலில் இன்னும் பலதரப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றது.
அந்தவகையில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் இபிடி உடன் கூடிய ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களையே இந்த காரில் வழங்கி இருக்கின்றனர். இதுமட்டுமல்ல இதுபோன்று இன்னும் 15க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களை ஆல்டோ கே10 காரில் மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது.
இந்தியாவில் ஆல்டோ கே10 நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எஸ்டிடி (Std), எல்எக்ஸ்ஐ (LXI), விஎக்ஸ்ஐ (VXI) மற்றும் விஎக்ஸ்ஐ பிளஸ் (VXI+) ஆகியவையே அவை ஆகும். இதேபோல், பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என்கிற இரண்டு விதமான ஆப்ஷன்களிலும் இந்த காரை வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இரண்டிலும் கே-சீரிஸ் 1.0 லிட்டர் டூயல் ஜெட், டூயல் விவிடி மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இது இ20 ஃப்யூவலில் இயங்கும் திறன் கொண்டது ஆகும். இந்த கார் இந்தியாவில் ரூ. 4.09 லட்சம் என்கிற விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பாதுகாப்பான கார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருக்கின்றன. ஆகையால், மாருதி சுஸுகிக்கு போட்டி அதிகரித்த சூழல் உள்ளது. இந்த சூழலைச் சமாளிக்கும் பொருட்டே மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது அதன் விலை குறைவான கார் மாடலான ஆல்டோ கே10 ஹேட்ச்பேக் காரில் ஆறு ஏர் பேக்குகளை கட்டாயமாக்கி இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








