பாதுகாப்பில் டாடாவையே தூக்கி சாப்பிட போகும் மாருதி! வரிசையா ஒவ்வொரு காரும் எல்லாரையும் மிரள விடுது!
மாருதி சுஸுகி கார்கள் (Maruti Suzuki Cars) பாதுகாப்பு இல்லாதவை என்பதெல்லாம் அந்த காலம். டாடா (Tata) மற்றும் மஹிந்திரா (Mahindra) நிறுவனங்களின் கார்களை போல், மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களும் குளோபல் என்சிஏபி (Global NCAP) மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்புகளின் மோதல் சோதனைகளில், சிறப்பாக செயல்பட தொடங்கி விட்டன.
மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) மற்றும் மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) ஆகிய 2 கார்களும், குளோபல் என்சிஏபி மற்றும் பாரத் என்சிஏபி என 2 அமைப்புகளின் மோதல் சோதனைகளிலும், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (5 Star Safety Rating) பெற்று அசத்தியுள்ளன.

இந்த வரிசையில் மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto) கார், பாரத் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில், தற்போது முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. இது பிரீமியம் எம்பிவி (Premium MPV) ரகத்தை சேர்ந்த மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாகும்.
பெரியவர்களுக்கான பாதுகாப்பில் மாருதி சுஸுகி இன்விக்டோ கார் 32க்கு 30.43 புள்ளிகளை மாருதி சுஸுகி இன்விக்டோ ஸ்கோர் செய்துள்ளது. அதே நேரத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 45 புள்ளிகளை மாருதி சுஸுகி இன்விக்டோ ஸ்கோர் செய்துள்ளது. இந்த காரில், பாதுகாப்பு வசதிகளுக்கு சற்றும் பஞ்சம் இல்லை.

6 ஏர்பேக்குகள், 360 டிகிரி வியூ கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பவர் பிரேக் போன்றவை எல்லாம் மாருதி சுஸுகி இன்விக்டோ காரின் குறிப்பிடத்தக்க பாதுகாப்பு வசதிகள் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி இன்விக்டோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 24.97 லட்ச ரூபாயாக இருக்கிறது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 28.70 லட்ச ரூபாயாக உள்ளது. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்தான், மாருதி சுஸுகி இன்விக்டோ என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அதாவது சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகிய 2 நிறுவனங்களும் கூட்டணி அமைத்துள்ளன. இதன் மூலமாக 2 நிறுவனங்களும் தங்களுக்கு இடையே கார்களை பரிமாறி கொள்கின்றன. பின்பு அவற்றில் பேட்ஜ் மற்றும் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அப்படி இந்த கூட்டணியின் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரு கார்தான், மாருதி சுஸுகி இன்விக்டோ.
முன்னதாக டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரும், பாரத் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றிருந்தது. இந்த வரிசையில் தற்போது மாருதி சுஸுகி இன்விக்டோ காரும், பாரத் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை தன்வசப்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: குளோபல் என்சிஏபி மற்றும் பாரத் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் அமர்க்களப்படுத்த தொடங்கியிருப்பது உண்மையிலேயே நல்ல விஷயம்தான். இது மாருதி சுஸுகி நிறுவன கார்களின் மீதான வாடிக்கையாளர்களின் நம்பிக்கை அதிகரிக்க உதவி செய்யும்.
அத்துடன் இதன் விளைவாக மாருதி சுஸுகி கார்களின் விற்பனை எண்ணிக்கையும் உயரும் என நாங்கள் கருதுகிறோம். முன்பெல்லாம் வாடிக்கையாளர்கள் புதிய கார்களை வாங்கும்போது, பாதுகாப்பை பெரிய விஷயமாக எடுத்து கொள்ள மாட்டார்கள். ஆனால் தற்போதெல்லாம் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ற வகையில், மாருதி சுஸுகி நிறுவனம் தங்களது கார்களில் பாதுகாப்பை அதிகரித்து வருவது, சிறப்பான ஒரு விஷயமாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








