பழச புதுசா மாத்துறவங்கள பாத்திருப்பீங்க.. இங்க ஒருத்தரு புதுச பழசுபோல மாத்திருக்காரு! ரசிக்காம இருக்க முடியல!
இதுவரை பழைய தகர டப்பா கார்களையும், துருவிற்கு இரையாகிக் கொண்டிருக்கும் கார்களையே புதுசு போல் மாற்றிய சம்பவங்களை நம் பார்த்திருக்கின்றோம். ஆனால், இங்கே ஒரு நபர் புத்தம் புதிய கார் மாடலை விண்டேஜ் காரை போல மாற்றியிருக்கின்றார். மாருதி சுஸுகி ஜிம்னி இதுவே விண்டேஜ் லுக்கிற்கு மாற்றப்பட்டு இருக்கும் கார் மாடல் ஆகும். ஃபோர்டு ப்ரோன்கோ கார் மாடலாகவே அது மாற்றப்பட்டு இருக்கின்றது. இந்த கார் மாடல் இந்தியாவில் இதுவரை விற்பனைக்கு வழங்கப்பட்டது இல்லை என்பது கவனிக்கத்தகுந்தது.
இதுவே மாருதி சுஸுகி ஜிம்னி காரை ஃபோர்டு ப்ரோன்கோ-வாக மாற்றச் செய்திருக்கின்றது. அதாவது, ஃபோர்டு ப்ரோன்கோ காரீன் மீது கொண்டிருந்த அதீத ஆர்வத்தின் காரணமாக இவ்வாறு மாற்றி இருக்கின்றனர். ஓர் ஃபோர்டு ப்ரோன்கோ காரை இந்தியாவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் எனில் அதை பிரத்யேகமாக இறக்குமதி செய்தாக வேண்டும். இதற்கு மிகப் பெரிய அளவில் பணம் செலவழியக் கூடும். அத்துடன், பல பேரை தொடர்புக் கொள்ளவும் வேண்டியிருக்கும்.

இந்த அனைத்து சிரமங்களையும் மாடிஃபிகேஷன் அசால்டாக தவிர்த்திருக்கின்றார் ஜிம்னி கார் உரிமையாளர். ஆனால், இவ்வாறு காரை உண்மை தன்மை மாறும் அளவிற்கு மாற்றுவது மிகப் பெரிய சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. குறிப்பாக, இந்திய மோட்டார் வாகன சட்டம் இந்த மாதிரியான வாகனங்களின் இயக்கத்திற்கு அனுமதி வழங்குவதில்லை. இதேபோல், அவசர நேரங்களில் காப்பீட்டையும் இதற்கு கவர் செய்ய முடியாது.
இத்தனை பிரச்னைகளைப் பற்றியும் கவலைப்படாமலேயே ஜிம்னி உரிமையாளர் விண்டேஜ் ஃபோர்டு ப்ரோன்கோவை போல மாற்றியிருக்கின்றார். இதற்கு அவர் எவ்வளவு செலவு செய்தார் என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், காரின் விலைக்கு டஃப் கொடுக்கின்ற அளவிலேயே இந்த மாடிஃபிகேஷனுக்கு அவர் செலவு செய்திருப்பார் என்று யூகிக்கப்படுகின்றது. அந்தவகையில், குறைந்தபட்சம் 1 அல்லது 2 லட்சம் வரை அவர் செலவு செய்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜிம்னி காரின் முன் பக்கத்தில் விண்டேஜ் ஃபோர்டு ப்ரோன்கோ காரை பிரதிபலிக்கும் வகையில் சில்வர் நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட டிஏஎம்டி கிரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், முன் பக்க பம்பரும் மாற்றப்பட்டு இருக்கின்றது. இதேபோல், வீல்கள் மற்றும் நிறங்களும் மாற்றப்பட்டு இருக்கின்றன. ஆனால், ஹெட்லைட், பாடி பேனல் உள்ளிட்டவற்றை அவர் மாற்றவில்லை.
ஆனால், பான்னெட் மாற்றப்பட்டு இருக்கின்றது. ஃபோர்டு ப்ரோன்கோ காரில் இருப்பதை போல கட்டுமஸ்தான பேடி பேனலே அதில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது மாற்றப்பட்டு இருக்கும் பாகங்கள் சில வெளிநாட்டில் இருந்து ஸ்பெஷலாக இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். குறிப்பாக, 16 அங்குல அளவில் பொருத்தப்பட்டு இருக்கும் டீன் ஸ்டீல் வீல் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருக்கின்றது.
இதேபோல், தனாபே சஸ்பென்ஷன், 40 மிமீ கோப்ரா லிஃப்ட் ஸ்பிரிங் மற்றும் ஃபுஜிட்சுபோ ஆக்சில்-பேக் எக்சாஸ்ட் மஃப்ளர் ஆகியவையும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த மாற்றங்களை மட்டுமல்ல காரின் மேற்பரப்பை பாதுகாக்கும் விதமாக பிபிஎஃப் பயன்படுத்தி இருக்கின்றனர். இது புதிய நிறத்தை எப்போதும் புதிதுபோல் பாதுகாக்க உதவியாக இருக்கும்.
இந்த மாற்றங்களைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் இந்த காரில் ஜிம்னி-யின் உரிமையாளர் செய்யவில்லை. குறிப்பாக எஞ்சின் அப்படியே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. 1.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 105 பிஎச்பி மற்றும் 134 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி சுஸுகி ஜிம்னி ரூ. 12.76 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அதிக விலைக் கொண்ட காரையே தற்போது விண்டேஜ் வாகனமாக மாற்றி இருக்கின்றனர். இது பலரின் கவனத்தை கவரும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








