சுறா படம் மாதிரி பயங்கர சீனா வந்து ஊத்திகிட்டு போன மாருதி கார்! ஆள் இல்லாம ஷோரூம் காத்து வாங்கீட்டு இருக்கு!

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வந்த கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny). ஆனால் மாருதி சுஸுகி எதிர்பார்த்த அளவிற்கு ஜிம்னி கார் விற்பனையாகவில்லை. ஒவ்வொரு மாதமும் மிகவும் குறைவான விற்பனை எண்ணிக்கையையே மாருதி சுஸுகி ஜிம்னி பதிவு செய்து வருகிறது. அது நடப்பு 2025ம் ஆண்டினுடைய ஜனவரி மாதத்திலும் தொடர்ந்துள்ளது. மாருதி சுஸுகி ஜிம்னி காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியிருக்கிறது.

இதன்படி பார்த்தால் மாருதி சுஸுகி நிறுவனம், நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம், 163 ஜிம்னி கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதத்திலும் கூட, 163 மாருதி சுஸுகி ஜிம்னி கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

Maruti Suzuki Jimny

எனவே மாருதி சுஸுகி ஜிம்னி விற்பனையில் வளர்ச்சியையோ அல்லது வீழ்ச்சியையோ பதிவு செய்யவில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், மாருதி சுஸுகி ஜிம்னி கார் இந்தியாவில் தோல்வியடைந்த ஒரு தயாரிப்பாகவே கருதப்படுகிறது. இந்த கார் எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும்.

ஆஃப்-ரோடு திறன்களில் மாருதி சுஸுகி ஜிம்னி வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய கூடிய ஒன்றாகவே உள்ளது. ஆனால் விலை அதிகம், சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்கள் இல்லை, அளவில் மிகவும் சிறியது என மாருதி சுஸுகி ஜிம்னி காரை பற்றிய ஏகப்பட்ட புகார்களை வாசிக்கின்றனர் வாடிக்கையாளர்கள்.

Maruti Suzuki Jimny Dashboard

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஜிம்னி காரின் ஆரம்ப விலையே 12.76 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 14.81 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

மாருதி சுஸுகி ஜிம்னி காரில், 105 பிஎஸ் பவர் மற்றும் 134 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன் இந்த காரில் 4 வீல் டிரைவ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா தார் (Mahindra Thar) மற்றும் ஃபோர்ஸ் கூர்கா (Force Gurkha) ஆகிய கார்களுடன், மாருதி சுஸுகி ஜிம்னி போட்டியிட்டு வருகிறது. இதில், மஹிந்திரா தார் காரின் விற்பனை அமர்க்களமாக உள்ளது. இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் சுமார் 8 ஆயிரம் மஹிந்திரா தார் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஆனால் மாருதி சுஸுகி ஜிம்னி காரின் விற்பனையோ 'டல்' அடித்து கொண்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவில் மிகவும் குறைவாக விற்பனையாகும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களில் ஒன்று என்ற மோசமான பெயரை மாருதி சுஸுகி ஜிம்னி எடுத்துள்ளது. வரும் காலம் இந்த மோசமான பெயரை மாற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Friday, February 21, 2025, 23:56 [IST]
English summary
Maruti suzuki jimny sales report january 2025 check all details here
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+