டாடா, ஹூண்டாய்க்கு சங்கு ஊத போகும் விலை குறைவான கார்! மொத்த நாட்டின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய மாருதி!
இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக திகழும் மாருதி சுஸுகி (Maruti Suzuki), நாளை (செப்டம்பர் 3), புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி (Compact SUV) கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. மாருதி சுஸுகி எஸ்சூடோ (Maruti Suzuki Escudo) அல்லது மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) என்ற பெயரில், இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரில், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பனரோமிக் சன்ரூஃப், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட வசதிகளை எல்லாம் நாம் எதிர்பார்க்கலாம். அத்துடன் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பும் இந்த காரில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
செயல்திறனை பொறுத்தவரையில், 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் + சிஎன்ஜி என மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்களை (Engine Options) இந்த கார் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை (Gear Box Options) பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் இ-சிவிடி என மொத்தம் 3 ஆப்ஷன்களை இந்த கார் பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசைனை (Design) பொறுத்தவரையில், இந்த காம்பேக்ட் எஸ்யூவி காரில், புதிதாக டிசைன் செய்யப்பட்ட அலாய் வீல்கள், எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் எல்இடி டெயில்லைட்கள் உள்ளிட்ட அம்சங்களை எல்லாம் நாம் எதிர்பார்க்கலாம்.
சுஸுகி நிறுவனத்தின் புதிய குளோபல் சி பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்படும் இந்த காம்பேக்ட் எஸ்யூவி காரின் வருகை, இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் டாடா கர்வ் (Tata Curvv) ஆகிய கார்களுக்கு எல்லாம் விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி கார், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள தயாரிப்புகளில் ஒன்றாகும். எனவே நாளை நடைபெறவுள்ள இந்த புதிய காரின் அறிமுக நிகழ்ச்சியை, அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் அரேனா டீலர்ஷிப்கள் மூலமாக விற்பனை செய்யப்படவுள்ள இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 9 அல்லது 9.50 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
இந்த விலையில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டால், மாருதி சுஸுகி நிறுவனத்தின் லைன்-அப்பில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) ஆகிய கார்களுக்கு இடைப்பட்ட மாடலாக இது இருக்கும். தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் ஆரம்ப விலை 11.42 லட்ச ரூபாயாக உள்ளது.
ஆனால் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, இதை விட சில லட்சங்கள் குறைவான விலையில்தான், இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரை விட, இது சற்றே நீளமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரை காட்டிலும், அதிக வசதிகளையும் இது கொண்டிருக்கலாம்.
பொதுவாகவே மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகள், வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்தவையாக இருக்கும். இந்த வரிசையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரும், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, ஓரளவிற்கு குறைவான விலையில்தான் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, இந்தியாவின் எஸ்யூவி கார் சந்தையில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








