ஹூண்டாய் கதையை முடிக்க வரும் மாருதியின் விலை குறைவான கார்! இந்த பேருக்காகவே ஒன்னு வாங்கலாமாட்ட இருக்கு!

இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) செக்மெண்ட்டில் தற்போது போட்டி அனல் பறந்து கொண்டுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos) போன்ற கார்கள் எல்லாம் இந்த செக்மெண்ட்டை சேர்ந்தவைதான். இந்த கார்களுக்கு எல்லாம் போட்டியாக புதிய கார் ஒன்றை மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த கார், மாருதி சுஸுகி எஸ்குடோ (Maruti Suzuki Escudo) என்ற பெயரில் அழைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த கார் வரும் செப்டம்பர் 3ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Maruti Suzuki Grand Vitara Side Design

இது குறித்து ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கூடிய விரைவில் விற்பனைக்கு வரவுள்ள மாருதி சுஸுகி எஸ்குடோ காரானது, 5 சீட்டர் மாடல் ஆகும். ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற போட்டி மாடல்கள் உடன் ஒப்பிடும்போது, மாருதி சுஸுகி எஸ்குடோ காரின் விலை மிகவும் குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) காரில் தற்போது வழங்கப்பட்டு வரும் அதே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள்தான், மாருதி சுஸுகி எஸ்குடோ காரிலும் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த காரின் ஒரு சில வேரியண்ட்களில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

Hyundai Creta

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரானது தற்போது மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரீமியம் கார்களை விற்பனை செய்யும் நெக்ஸா (NEXA) ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் மாருதி சுஸுகி எஸ்குடோ காரானது, அதன் அரேனா (Arena) ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்படவுள்ளது.

எனவே மாருதி சுஸுகி எஸ்குடோ காரை ஓரளவிற்கு குறைவான விலையில் எதிர்பார்க்க முடியும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மாருதி சுஸுகி எஸ்குடோ காரானது, இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. வெளிநாடுகளிலும் இந்த கார், மாருதி சுஸுகி எஸ்குடோ என்ற பெயரிலேயே விற்பனை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதே நேரத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் எஸ்குடோ காரை விற்பனைக்கு அறிமுகம் செய்த பின்னர், அதன் டொயோட்டா வெர்ஷன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்களுக்கு இடையே கூட்டணி இருப்பதால், அவை கார்களை பரிமாறி கொள்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி எஸ்குடோ காரின் வருகை, இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் போட்டியை இன்னும் கடுமையாக மாற்றும் என நாங்கள் கருதுகிறோம். இந்த விலை குறைவான காரின் வருகையால், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற கார்களுக்கு எல்லாம், விற்பனையில் மிக கடுமையான நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மாருதி சுஸுகி எஸ்குடோ ஓரளவிற்கு விலை குறைவானதாக இருந்தாலும் கூட, ஏராளமான வசதிகளை நாம் எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 6, 2025, 22:44 [IST]
English summary
Maruti suzuki mid size suv to be called victoris check all details here
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+