33 கிமீ மைலேஜ்! இந்த காரின் புது விலை வெறும் 3.50 லட்சம்தானா! இனிமேல் பைக்லாம் வித்த மாதிரிதான்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-presso). இது இந்திய சந்தையில் கிடைக்க கூடிய மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாகும். அத்துடன் அதிக மைலேஜ் வழங்க கூடிய கார்களில் ஒன்றாகவும் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ உள்ளது.

எஸ்-பிரெஸ்ஸோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 32.73 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அராய் அமைப்பு சான்று வழங்கிய மைலேஜ் (ARAI Mileage) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Maruti Suzuki S-Presso Side View

அத்துடன் மிகவும் விலை குறைவானதாக இருந்தாலும் கூட, மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரில் ஏராளமான வசதிகளும் (Features) வழங்கப்பட்டுள்ளன. இதில், 17.78 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

அத்துடன் ரிமோட் கீலெஸ் எண்ட்ரி, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், ஹில் ஹோல்டு, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஏர்பேக்குகள் மற்றும் இபிடி உடன் ஏபிஎஸ் போன்ற வசதிகளும், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரில் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் எஸ்யூவி கார்கள் போன்ற டிசைனும் கவனம் ஈர்க்கிறது.

Maruti Suzuki S-presso

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை தற்போதைய நிலையில் வெறும் 4.26 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் டாப் வேரியண்ட்டின் விலை 6.11 லட்ச ரூபாயாக உள்ளது.

இவை தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எஸ்-பிரெஸ்ஸோ காரின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆனால் மத்திய அரசின் ஜிஎஸ்டி (GST) வரி குறைப்பு காரணமாக, மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விலை அதிரடியாக குறையவுள்ளது.

காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள செய்தியின்படி பார்த்தால், தற்போதைய நிலையில் 4.26 லட்ச ரூபாயாக உள்ள மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் ஆரம்ப விலை இனி வெறும் 3.50 லட்ச ரூபாயாக குறையவுள்ளது. அதாவது ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை மட்டும் 76 ஆயிரம் ரூபாய் குறையவுள்ளது.

ஆனால் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் வேரியண்ட் வாரியான அதிகாரப்பூர்வ புதிய விலை பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விலை அதிகபட்சமாக 1,29,600 ரூபாய் வரை குறையவுள்ளதாக காடிவாடி தளம் தனது செய்தியில் கூறியுள்ளது. எனவே மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் அனைத்து வேரியண்ட்களின் விலையும் வெகுவாக குறைகிறது என்பது உறுதி.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வெறும் 3.50 லட்ச ரூபாய்க்கு புதிய கார் என்பது உண்மையிலேயே மிகவும் சிறப்பான ஒரு விஷயமாகதான் இருக்கும். எனவே பைக்குகளில் இருந்து அப்டேட் ஆகி முதல் முறையாக ஒரு புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம். இது சிறிய கார் என்பதால் ஓட்டுவதற்கும் எளிமையாக இருக்கும்.

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10), ரெனால்ட் க்விட் (Renault Kwid) மற்றும் டாடா டியாகோ (Tata Tiago) போன்ற கார்களுக்கு எல்லாம், மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ திகழ்கிறது. அதிரடியான விலை குறைப்பு காரணமாக வரும் மாதங்களில், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, September 18, 2025, 18:39 [IST]
English summary
Maruti suzuki s presso new price after gst cut full details here
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+