33 கிமீ மைலேஜ்! புது விலை வெறும் 3.90 லட்சம்தான்! இதுக்கு மேலயும் சொந்த கார் இல்லாம பைக் ஓட்றதுல அர்த்தமே இல்ல

புதிய கார்கள் (New Cars) மீதான ஜிஎஸ்டி வரி (GST Tax) 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 22ம் தேதியில் இருந்து, இது அமலுக்கு வருகிறது. எனவே வரும் செப்டம்பர் 22ம் தேதிக்கு பிறகு, புதிய கார்களின் விலை வெகுவாக குறையவுள்ளது.

வரும் செப்டம்பர் 22ம் தேதிக்கு பின்னர், தங்கள் நிறுவனங்களின் கார்கள் என்ன விலையில் விற்பனை செய்யப்படும்? என்பதை பல்வேறு முன்னணி வாகன நிறுவனங்கள் தற்போது தொடர்ச்சியாக அறிவித்து வருகின்றன. ஆனால் இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ள மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவன கார்களின் புதிய விலை பட்டியல் (New Price List) இன்னும் வெளியாகவில்லை.

Maruti Suzuki S-Presso Side View

இருப்பினும் மாருதி சுஸுகி நிறுவன கார்களின் புதிய விலை எவ்வளவாக இருக்கும்? என்ற கணிப்பு நமக்கு இருக்கிறது. இந்த செய்தியில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றான மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் புதிய விலை எவ்வளவாக இருக்கும்? என்பதை பார்க்கலாம்.

மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விலை சுமார் 8.50 சதவீதம் என்ற அளவில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியானால் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் புதிய விலை சுமார் 3.90 லட்சம் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Maruti Suzuki S-presso

தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் 4.26 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், 8.50 சதவீதம் விலை குறைப்பு என்றால், சுமாராக 36 ஆயிரம் ரூபாய் குறையும். எனவே மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் புதிய விலை சுமார் 3.90 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டும்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் டாப் வேரியண்ட் தற்போதைய நிலையில் 6.11 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், 8.50 சதவீதம் விலை குறைப்பு என்றால், சுமாராக 52 ஆயிரம் ரூபாய் குறையும். அப்படியானால் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் டாப் வேரியண்ட்டின் புதிய விலை இனி சுமாராக 5.59 லட்ச ரூபாய் என்கிற அளவில் மட்டுமே இருக்கும்.

ஆனால் இவை அதிகாரப்பூர்வமான புதிய விலை கிடையாது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இது யூகத்தின் அடிப்படையிலான எதிர்பார்ப்பு மட்டுமே. கூடிய விரைவில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் வேரியண்ட் வாரியான புதிய விலை பட்டியலை மாருதி சுஸுகி நிறுவனம் அறிவிக்கும். அதுவரை நாம் காத்திருப்பது அவசியம்.

எனினும் ஒரு சில ஆயிரங்கள் சற்று குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ இருந்தாலும், கிட்டத்தட்ட நாங்கள் கூறியுள்ள புதிய விலையில்தான் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ விற்பனை செய்யப்படும் என உறுதியாக எதிர்பார்க்கலாம். எனவே ஏற்கனவே மிகவும் விலை குறைவான மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரை, இனி நம்மால் இன்னும் மிக குறைவான விலையில் சொந்தமாக்கி விட முடியும்.

மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் மிகவும் விலை குறைவானதாக இருந்தாலும் கூட, அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாகும். இதன் பெட்ரோல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு சுமார் 25.30 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் இதன் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு சுமார் 32.73 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக மாருதி சுஸுகியின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு புதிய காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ நல்ல ஆப்ஷன். இது உருவத்தில் சிறியது என்பதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் ஓட்டுவதற்கு ஏதுவாக இருக்கும். குறிப்பாக பைக்கில் இருந்து அப்டேட் ஆகி முதல் முறையாக புதிய கார் வாங்க கூடிய வாடிக்கையாளர்கள், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோவை பரிசீலனை செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 9, 2025, 23:33 [IST]
English summary
Maruti suzuki s presso new price list post gst cut
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+