வெறும் நாலு லட்சத்துக்கு 6 ஏர்பேக் காரா! 33 கிமீ மைலேஜை வேற வாரி வழங்குது! பைக்குகளே தோத்துருமாட்ட இருக்கு!
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் நம்பர்-1 இடத்தில் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் சிறப்பான மைலேஜ் வழங்குவதும், அந்த நிறுவனத்திற்கு சர்வீஸ் சென்டர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும் இதற்கு முக்கியமான காரணங்களாக கருதப்படுகின்றன. இந்த வரிசையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களின் விலை குறைவாக இருப்பதும், அதன் முதல் இடத்திற்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றுதான். ஆனால் அதே மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஒரு சில விலை குறைவான கார்கள் விற்பனையில் தடுமாறி கொண்டுள்ளன என்பதையும் மறுக்க முடியாது.
இதில், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso). இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 4.27 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட 6.12 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இதன் மூலம் இந்திய சந்தையில் கிடைக்க கூடிய மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ இருக்கிறது. இருப்பினும் இந்த காரை வாங்குவதில் இந்திய வாடிக்கையாளர்கள் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை.
ஒவ்வொரு மாதமும் வெளியாகும் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் சேல்ஸ் ரிப்போர்ட்டில் (Sales Report) இது தெளிவாக தெரிகிறது. இந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள நடப்பு 2025ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்திற்கான மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் சேல்ஸ் ரிப்போர்ட்டும் வழக்கம் போல 'டல்' அடிக்கிறது.

இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 726 எஸ்-பிரெஸ்ஸோ கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2,476 ஆக இருந்தது. இதன் மூலம் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை 71 சதவீத வீழ்ச்சி ஆகும்.
கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போதுதான் வீழ்ச்சி என்றால், நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிட்டாலும் கூட, மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை வீழ்ச்சியையே சந்தித்துள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 1,788 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
ஆனால் இந்த எண்ணிக்கையானது, அதன் பின் ஏப்ரல் மாதம், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, 726 ஆக சரிவடைந்துள்ளது. இந்த வகையில் பார்த்தால் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை 59.40 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை மந்தமாக இருப்பதற்கு, அது பாதுகாப்பு இல்லாத கார் என்ற கருத்து வாடிக்கையாளர்கள் மத்தியில் இருப்பதும் ஒரு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.
குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ புள்ளிகளை குவிக்க தவறியதால்தான், இந்த கருத்து வாடிக்கையாளர்கள் மத்தியில் பரவியது. எனவே மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது எஸ்-பிரெஸ்ஸோ காரில் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகளை வழங்க தொடங்கியுள்ளது.
அதாவது ஆரம்ப நிலை வேரியண்ட் முதல் டாப் வேரியண்ட் வரை அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் இருக்கும். எனவே இனி வரும் மாதங்களிலாவது, இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை எண்ணிக்கை உயருமா? என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
எஸ்-பிரெஸ்ஸோ மட்டுமல்லாது, மாருதி சுஸுகி நிறுவனத்தின் அரேனா ஷோரூம்கள் (Maruti Suzuki Arena Showrooms) மூலமாக விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களிலும் தற்போது ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இது பாதுகாப்பு விஷயத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் எடுத்துள்ள மிகப்பெரிய நடவடிக்கைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரை பொறுத்தவரையில், அது அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய கார்களில் ஒன்றாகும். இந்த காரின் Std MT மற்றும் LXi MT ஆகிய 2 வேரியண்ட்களும் ஒரு லிட்டருக்கு 24.12 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. அதே நேரத்தில் VXi MT மற்றும் VXi+ MT ஆகிய 2 வேரியண்ட்களும் லிட்டருக்கு 24.76 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கின்றன.
மறுபக்கம் இந்த காரின் VXi(O) AGS மற்றும் VXi+(O) AGS ஆகிய 2 வேரியண்ட்களும் ஒரு லிட்டருக்கு 25.30 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இவை அனைத்துமே பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட்கள் ஆகும். ஆனால் இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் இதை விட அதிக மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கின்றன.
மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் சிஎன்ஜி இன்ஜின் பொருத்தப்பட்ட LXI MT மற்றும் VXI MT ஆகிய 2 வேரியண்ட்களும் ஒரு கிலோவிற்கு 32.73 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும்.
மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரில் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் மட்டுமல்லாது, அட்வான்ஸ்டு ஹில் ஹோல்டு அஸிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் ரியர் பார்க்கிங் அஸிஸ்ட் சென்சார் ஆகிய பாதுகாப்பு வசதிகளும் வழங்கப்படுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய இந்திய நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ மிகவும் ஏற்றதாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. குறிப்பாக முதல் முறையாக ஒரு புதிய காரை வாங்க கூடிய வாடிக்கையாளர்கள் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரை பரிசீலனை செய்யலாம்.
எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை மந்தமாகவே இருந்து வருவதால், மாருதி சுஸுகி நிறுவனம் அதன் விற்பனையை நிறுத்தி விடும் என தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் எஸ்-பிரெஸ்ஸோ காரில் தற்போது 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுவதால், அது போன்ற முடிவுகளை மாருதி சுஸுகி நிறுவனம் எடுக்காது என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








