சும்மா குடுத்தா கூட இந்த காரை யாரும் வாங்க மாட்டாங்கலாட்ட இருக்கு! மாருதி சுஸுகி மானத்தையே வாங்கீருச்சு!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso). இந்த கார் தற்போதைய நிலையில் வெறும் 4.26 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 6.11 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மிகவும் விலை குறைவானதாக இருந்தாலும் கூட, இந்த காரின் விற்பனை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெறும் 8 எஸ்-பிரெஸ்ஸோ கார்களை மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

Maruti Suzuki S-Presso Side View

நீங்கள் சரியாகதான் படித்துள்ளீர்கள். உண்மையிலேயே வெறும் 8 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் மட்டும்தான் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதை விட அதிர்ச்சிகரமான மற்றொரு விஷயம் என்னவென்றால், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் விற்பனையில் 87 சதவீத வீழ்ச்சியை வேறு பதிவு செய்துள்ளது.

ஆம், கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 60 எஸ்-பிரெஸ்ஸோ கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெறும் 8-ஆக குறைந்துள்ளது. இது 87 சதவீத வீழ்ச்சி ஆகும்.

Maruti Suzuki S-Presso

மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் மிகவும் விலை குறைவானது என்பதுடன், நல்ல மைலேஜ் (Mileage) வழங்க கூடிய ஒன்றாகவும் உள்ளது. இருப்பதிலேயே அதிகபட்சமாக மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 32.73 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கின்றன. இருப்பினும் கூட எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை 'டல்' அடித்து கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: உண்மையை சொல்ல வேண்டும் என்றால், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ 'ஃப்ளாப்' ஆன கார். குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் இந்த கார் சோபிக்க தவறியது இதற்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

குழந்தைகளுக்கான பாதுகாப்பில் ஜீரோ ஸ்டார் ரேட்டிங்கை வாங்கி மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ மண்ணை கவ்விய காரணத்தால், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இந்த காரை விரும்புவதில்லை. போதாக்குறைக்கு மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் டிசைனும் சொல்லி கொள்ளும்படி இல்லை என்பது பெரும்பாலான வாடிக்கையாளர்களின் கருத்து.

எனவே மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை எதிர்காலத்தில் முழுமையாக நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக இருந்தாலும் கூட, அதற்கும் ஒரு சில 'ஃபெயிலியர்' மாடல்கள் உண்டு. இந்த 'ஃபெயிலியர்' பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரு கார்தான் எஸ்-பிரெஸ்ஸோ.

More from DriveSpark

Article Published On: Sunday, January 19, 2025, 15:57 [IST]
English summary
Maruti suzuki s presso sales report december 2024 87 per cent down
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+