முழுசா 33 கிமீ மைலேஜ் தரும் கார்! ஆனா விலை வெறும் 4 லட்சம்தான்! பைக்குக்கு பதிலா இத வாங்கி குடும்பமே போகலாம்!

இந்திய சந்தையில் மிகவும் விலை குறைவான கார்கள் எல்லாம் விற்பனையில் சாதனைகளை படைத்தது அந்த காலம் என்று சொல்லும் நிலைமை வந்துள்ளது. ஆம், மிகவும் விலை குறைவான கார்களின் விற்பனை தற்போது 'டல்' அடிக்கிறது. இதற்கு மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso) ஒரு உதாரணம்.

இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான கார்களின் பட்டியலை தயாரித்தால், அதில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோவிற்கு நிச்சயம் இடம் உண்டு. இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 4.26 லட்ச ரூபாய் மட்டுமே. டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 6.12 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.

Maruti Suzuki S-Presso Side View

இவை மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். எனவே பெரிதாக பணத்தை செலவு செய்யாமல், சொந்தமாக ஒரு காரை வாங்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்களுக்கு மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ மிகச்சிறந்த ஆப்ஷன். குறிப்பாக முதல் முறையாக கார் வாங்குபவர்கள் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோவை பரிசீலனை செய்யலாம்.

ஏனெனில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ மிகவும் விலை குறைவானது மட்டுமல்ல. கூடவே அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாகவும் உள்ளது. மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் Std (O) மற்றும் LXi (O) ஆகிய வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.12 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவை ஆகும்.

Maruti Suzuki S-Presso

மறுபக்கம் VXi (O) மற்றும் VXi+ (O) ஆகிய வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.76 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கின்றன. அதே நேரத்தில் VXi (O) AGS மற்றும் VXi+ (O) AGS ஆகிய வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 25.30 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகின்றன. இவை அனைத்தும் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ள வேரியண்ட்கள் ஆகும்.

இவையே சிறப்பான மைலேஜ்தான். இதை விட அதிக மைலேஜ் வேண்டும் என நீங்கள் நினைத்தால், சிஎன்ஜி இன்ஜின் வேரியண்ட்களை தேர்வு செய்யலாம். மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் சிஎன்ஜி இன்ஜின் பொருத்தப்பட்ட LXI (O) மற்றும் VXI (O) ஆகிய வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 32.73 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கின்றன.

இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும். அதிக மைலேஜ் வழங்க கூடியது என்பதால், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரை இயக்குவதற்கான செலவு குறைவாகவே இருக்கும். இது இந்த காரின் முக்கியமான பிளஸ் பாயிண்ட்களில் ஒன்றாகும்.

அத்துடன் 17.78 செமீ ஸ்மார்ட்ப்ளே ஸ்டுடியோ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்டு, இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் போன்ற வசதிகளும், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரில் வழங்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தத்தில் இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு ஆகும். ஆனால் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை அவ்வளவு சிறப்பாக இல்லை. நடப்பு 2025ம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் (ஜனவரி-மே) வெறும் 8,900 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

நடப்பு 2025ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 2,895 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதன் பின் வந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் முறையே 1,685 மற்றும் 1,788 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இதன் பின்னர் வந்த ஏப்ரல் மாதத்தில் வெறும் 726 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் மட்டும்தான் விற்பனை செய்யப்பட்டன.

இதை தொடர்ந்து வந்த மே மாதத்தில் 1,806 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் விற்பனை செய்யப்பட்டன. ஆக மொத்தம், நடப்பு 2025ம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் வெறும் 8,900 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. எஸ்-பிரெஸ்ஸோ கார், மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பாக இருக்கும் நிலையில், அதற்கு இது மிகவும் குறைவான விற்பனை எண்ணிக்கையாக கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ போன்ற மிகவும் விலை குறைவான ஹேட்ச்பேக் கார்களை தற்போதெல்லாம் பெரும்பாலான இந்திய வாடிக்கையாளர்கள் விரும்புவதில்லை. அதற்கு பதிலாக சற்று விலை உயர்ந்த எஸ்யூவி கார்களை விரும்புகின்றனர். மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை மந்தமாக இருந்து வருவதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, July 4, 2025, 12:33 [IST]
English summary
Maruti suzuki s presso sales report january may 2025 just 8900 units sold
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+