வெறும் நாலே கால் லட்சத்துக்கு பைக் மாதிரி மைலேஜை வாரி வழங்கும் காரா! 33 கிமீ கெடைக்கும்னு அடிச்சு சொல்றாங்க!

இந்தியாவில் மாருதி சுஸுகி கார்களுக்கு (Maruti Suzuki Cars) மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. விலை மற்றும் பராமரிப்பு செலவுகள் குறைவு, மைலேஜ் அதிகம் போன்றவைதான் இதற்கு மிகவும் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. ஆனால் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் அதிக மைலேஜ் வழங்க கூடிய மாருதி சுஸுகி கார் ஒன்று இந்திய சந்தையில் விற்பனையில் தள்ளாடி கொண்டுள்ளது. மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso) காரை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஃப்ளாப் கார்களில் (Flop Cars) ஒன்றாக கருதப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாத காரணத்தால், ஒவ்வொரு மாதமும் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை 'டல்' அடித்து கொண்டுதான் உள்ளது. நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ஆம், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் விற்பனையில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Maruti Suzuki S-Presso

மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய சந்தையில் 1,788 எஸ்-பிரெஸ்ஸோ கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 2,497 ஆக இருந்தது. இது மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனையில் ஏற்பட்டுள்ள 28 சதவீத வீழ்ச்சி ஆகும்.

தற்போது வெளியாகியுள்ள மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலம் இது தெரிய வந்துள்ளது. விலை குறைவு மற்றும் மைலேஜ் (Mileage) அதிகம் என்றாலும் கூட, மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரை வாடிக்கையாளர்கள் பாதுகாப்பானதாக கருதவில்லை. இதுவே இந்த காரின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

Maruti Suzuki S-Presso Front Profile

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டான STD (O) வேரியண்ட்டின் விலை தற்போதைய நிலையில் வெறும் 4.27 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டான VXI (O) CNG வேரியண்ட்டின் விலையோ வெறும் 6.12 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். அதே நேரத்தில் இந்த காரின் பெட்ரோல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.12 கிலோ மீட்டர் முதல் 25.30 கிலோ மீட்டர் வரையிலான மைலேஜை வழங்குகின்றன. மறுபக்கம் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 32.73 கிலோ மீட்டர் மைலேஜை வாரி வழங்குகின்றன. இவை மாருதி சுஸுகியின் இணையளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மைலேஜ ஆகும்.

ஆனால் குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் சோபிக்க தவறிய காரணத்தால், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரை இந்திய வாடிக்கையாளர்கள் பாதுகாப்பற்றதாக கருத தொடங்கினர். இது இந்த காரின் வீழ்ச்சிக்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக அமைந்து விட்டது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விற்பனை மிகவும் மந்தமாக இருப்பதால், எதிர்காலத்தில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் மாருதி சுஸுகி நிறுவனத்திடம் இருந்து இன்னும் வெளியாகவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 17, 2025, 23:38 [IST]
English summary
Maruti suzuki s presso sales report march 2025 28 per cent down
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+